வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசுப் பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய டிரம்ப் உத்தரவு.. இந்தியர்களுக்கு சிக்கல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு ஒப்பந்தப் பணிகளில் அமெரிக்கர்களை மட்டுமே எடுக்க வேண்டும், எச்1பி விசா வைத்துள்ளோரை எடுக்கக் கூடாது என அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது இந்தியர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பான உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்து அதில் கையெழுத்திட்டுள்ளேன். மிக எளிய விதியின் கீழ் செயல்படும் வகையில் போடப்பட்ட இந்த உத்தரவின்படி, ஒப்பந்த பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அமெரிக்கர்களுக்கு மட்டுமே வேலைகளை வழங்க வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் எச் 1 பி விசாவில் ஒழுங்குமுறைகளை இறுதி செய்துள்ளோம். அமெரிக்க தொழிலாளர்களுக்கு மாற்றாக இனி வேறு எந்த நாட்டினரும் இங்கு பணியாற்ற முடியாது.

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக! 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி, மும்மொழி திட்டம்- புதிய கல்வி கொள்கை தமிழில் முழுமையாக!

வேலைகளை பறித்து

வேலைகளை பறித்து

அமெரிக்கர்களுக்கான வேலைகளை பறித்து வேறு நாட்டினருக்கு வழங்கக் கூடாது. அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக எச் 1 பி பயன்படுத்தப்பட வேண்டும். எனவே அரசு ஒப்பந்த பணிகளில் அமெரிக்க குடிமக்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்றார். இதன் மூலம் எச் 1 பி விசாவின் கீழ் அரசு ஒப்பந்த பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இது இந்தியர்களுக்கு பாதகமானதாகும்.

பணி நீக்கம்

பணி நீக்கம்

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்கும் அமெரிக்க அரசு ஒப்பந்த நிறுவனமான டென்னிஸி வேலி ஆணையத்தை டிரம்ப் விமர்சித்தார். மேலும் அந்த ஆணையத்தின் தலைவர் ஸ்கிப் தாம்சன் உள்பட இருவரை பணிநீக்கம் செய்தார். மேலும் அவர் கூறுகையில் அமெரிக்கர்களுக்கு வேலை வழங்காவிட்டால் ஆணையத்தின் மற்ற உறுப்பினர்களும் பணியிலிருந்து நீக்கப்படுவர். தற்காலிக விசா மூலம் வெளிநாட்டு ஊழியர்களை இந்த ஆணையம் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தியதன் மூலம் டென்னிஸில் உள்ள 200-க்கும் மேற்பட்ட அமெரிக்காவின் திறமையான ஐடி ஊழியர்கள் வேலையிழந்துள்ளனர்.

அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை

இந்த ஆணையம் உடனடியாக ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் முதலில் அமெரிக்கர்களின் நலனில் அக்கறை செலுத்துபவராக இருக்க வேண்டும். அவருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் ஊதியம் வழங்கக் கூடாது. இதை எச்சரிக்கையாக கொண்டு அனைத்து அரசு ஒப்பந்த நிறுவனங்களும் செயல்பட வேண்டும்.

அமெரிக்கர்களுக்கு துரோகம்

அமெரிக்க ஊழியர்களுக்கு துரோகம் இழைத்தால் ஆணையத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களாகிய நீங்களும் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என்றார். கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் வெளிநாட்டினர் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் எச் 1 பி விசாவை வழங்க இந்த ஆண்டு இறுதி வரை தடை விதித்துள்ளார் டிரம்ப். மேலும் அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்றால் அந்த ஊழியர் அதிக திறமைசாலியாகவும் அதிக ஊதியம் பெறுபவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்திய, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கிலான ஊழியர்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியமர்த்துவது குறிப்பிடத்தக்கது.

English summary
American President Donald Trump bans hiring H1 B Visa holders for federal contracts and insisted Hire Americans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X