வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் தவிர்க்க முடியாதவன்.. அவெஞ்சர்ஸ் தானோஸ் கெட்டப்பில் மிரட்டும் டொனால்ட் டிரம்ப்.. வீடியோ வைரல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் வில்லனை போல் சித்தரித்து ஒரு வீடியோவை டிரம்பின் பிரசாரக் குழு வெளியிட்டுள்ளது.

அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் மீது உக்ரைனில் விசாரணை நடத்த அந்நாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்கா அருகில் உள்ள தீவில் நித்யானந்தா... கைது செய்ய போலீஸ் தீவிரம் அமெரிக்கா அருகில் உள்ள தீவில் நித்யானந்தா... கைது செய்ய போலீஸ் தீவிரம்

முக்கியம்

முக்கியம்

இது தொடர்பாக டிரம்ப் மீது பதவி நீக்க விசாரணை நடத்தி வரும் அமெரிக்காவின் நாடாளுமன்ற புலனாய்வு குழு அவர் மீதான புகார்களை வெளியிட்டுள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை ஆகும்.

ட்விட்டரில்

ட்விட்டரில்

பதவி நீக்க விசாரணையை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் பதவி நீக்க விசாரணையை நடத்தி வரும் ஜனநாயக கட்சியினரை அச்சுறுத்தும் வகையில் டிரம்ப்பை பாலிவுட் பட வில்லன் போல் சித்தரித்து டிரம்பின் பிரசாரக் குழு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

காட்சிகள்

காட்சிகள்

அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் தானோஸ் வில்லன் போல் சித்தரித்துள்ளனர். அந்த வீடியோவில் தானோஸ் போல் சித்தரிக்கப்பட்ட டிரம்ப் நான் தவிர்க்க முடியாதவன் என கூறிவிட்டு சொடக்கு போடும் காட்சிகள் உள்ளன. அதிபராக டிரம்ப் மீண்டும் வருவதை தவிர்க்க முடியாதது என ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரசார குழு

அவெஞ்சர்ஸ் படத்தில் வில்லன் தானோஸ் ஒரு சொடக்கில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பாதியை அழித்துவிடுவார். அது போல் டிரம்பும் ஒரே சொடக்கில் ஜனநாயக கட்சியின் விசாரணையை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவார் என பிரசார குழு மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது.

English summary
Trump campaign ad shows president as Avengers villain Thanos. Videos are trolled.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X