வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விடாது கருப்பாக துரத்தும் டிரம்ப்.. ஜோ பிடன் வெற்றியை எதிர்த்து ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை செல்லாததாக்க கோரி ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் டொனால்ட் டிரம்பின் பிரசாரக் குழு வழக்கு பதிவு செய்தது.

அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பிடன் 270 இடங்களில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்போ 232 இடங்களில் போட்டியிட்டார்.

Trump campaign files election lawsuit in Georgia

இந்த நிலையில் ஜோ பிடன் மோசடியாக தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக டிரம்ப் இன்று வரை புகார் கூறி வருகிறார். வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில் பதிவான பல லட்சம் தபால் ஓட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கக்கோரி டிரம்ப் பிரசார குழு சார்பில் அந்த மாகாண கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

20 தேர்தல் சபை உறுப்பினர்களை கொண்டுள்ள பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ பைடன் டிரம்பைவிட சுமார் 80,000 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். எனவே ஜோ பைடனின் இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கும் நோக்கிலேயே டிரம்ப் பிரசார குழு இந்த வழக்கை தொடர்ந்தது.

அமெரிக்கர்களுக்கு கொரோனா வாக்சின் கட்டாயமில்லை... ஜோபிடன் அதிரடி!அமெரிக்கர்களுக்கு கொரோனா வாக்சின் கட்டாயமில்லை... ஜோபிடன் அதிரடி!

இந்த வழக்கில் டிரம்ப் தரப்பு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்காததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜார்ஜியா மாகாண மறு வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடி நடந்துள்ளதாக கூறி மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் டிரம்ப் பிரசாரக் குழு கோர்ட்டை நாடியுள்ளது. அதில் தேர்தல் முடிவுகளையே செல்லாததாக அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

English summary
US President Donald Trump files election lawsuit in Georgia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X