வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்படி போடு அருவாள... பணம் கொடுத்து தான் ஆட்களை சேர்த்தாரா டிரம்ப்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய பேரணி மற்றும் தாக்குதலுக்கு பணம் கொடுத்து ஆட்கள் திரட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி.6ம் தேதி அமெரிக்காவின் U.S. Capitol-ல் டிரம்ப் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வன்முறை, அமெரிக்க வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதிவானது.

Trump campaign paid $2.7 million organizers rally U.S. Capitol riot

ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்று வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள செனட் கட்டிடத்தில் நடைபெற்ற போது, அங்கு வந்த நூற்றுக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் பைடன் வெற்றிக்கு எதிராக கோஷமிட்டு பிறகு கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர்.

இந்நிலையில், Center for Responsive Politics தகவலின் படி, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே டிரம்ப் ஆதரவாளர்கள் சார்பில் நிறுவனம் மற்றும் தனி நபர்கள் என கிட்டத்தட்ட 2.7 மில்லியன் டாலர்களுக்கு மேல் பணம் கொடுத்து ஆட்களை செட்டப் செய்து, டிரம்ப் பேரணிக்கு ஆதரவாளர்களை திரட்டியிருப்பது தெரியவந்துள்ளது.

பேரணிக்கு National Park Service வழங்கிய அனுமதி சான்றிதழில், பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்த டிரம்ப் பிரச்சார அதிகாரிகள் எட்டு பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, US Capitol கலவரத்திற்குப் பிறகு வடக்கு அயர்லாந்தின் சிறப்பு தூதர் பதவியை ராஜினாமா செய்த டிரம்பின் முன்னாள் தலைமை அலுவலரான மிக் முல்வானியின் உறவினர் மேகி முல்வானே பெயரும் இதில் இடம் பெற்றுள்ளது. இவருக்கு நவம்பர் 23 வரை டிரம்ப் குறித்த பிரச்சாரத்திற்கு மட்டும் 138,000 டாலர் தொகை வழங்கப்பட்டது.

பேரணிக்கு பிறகு, US Capitol நோக்கி அணிவகுத்துச் சென்று டிரம்ப் ஆதரவாளர்கள் நிகழ்த்திய வன்முறை ஊருக்கே தெரியும்.

மேலும், பேரணிக்கு அனுமதி வழங்கிய இரு அதிகாரிகளில் ஒருவரான மேகன் பவர்ஸ் என்பவருக்கு பிப்ரவரி 2019 தொடங்கி, சமீப காலம் வரை 290,000 டாலர் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த மேகன் பவர்ஸ் தான் டிரம்ப்பின் பிரச்சாரத்திற்கான செயல்பாட்டு இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.

அதேபோல், பேரணியின் ஆலோசகரான கரோலின் ரென் மற்றும் மேலாளர் ரொனால்ட் ஹோல்டன் ஆகியோரும் பணம் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, Event Strategies Inc., நிறுவனத்துக்கு உச்சபட்சமாக 1.7 மில்லியன் டாலர் தொகை டிரம்ப் பிரச்சாரக் குழு மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஜஸ்டின் காபோரேல் மற்றும் டிம் உன்ஸ் ஆகியோர் தான் பேரணி தயாரிப்பு மேலாளராக இருந்துள்ளனர்.

English summary
Trump campaign paid $2.7 dollars organizers - Here full list
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X