• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

மனம் மாறிய டிரம்ப்... சுய மன்னிப்பு அளிக்கும் முடிவில் மாற்றம்... தேர்தல் போட்டியிடுவதில் சிக்கல்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், மன்னிப்பு உத்தரவை அளிக்கும் பட்டியலைத் தயார் செய்து வைத்துள்ளார் என்றும், இருப்பினும் பலரும் எதிர்பார்த்ததைப் போல அதில் அவரது பெயர் இடம்பெறவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் டிரம்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். நாளை மறுநாள் அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார்.

மேலும், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார். இருப்பினும், இந்த விழாவில் தான் பங்கேற்பாகப் போவதில்லை என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

மன்னிப்பை வாரி வழங்கும் டிரம்ப்

மன்னிப்பை வாரி வழங்கும் டிரம்ப்

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களை மன்னிக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அதிபர் பதவியின் இறுதி நாட்களிலுள்ள டிரம்ப், பல வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள தனக்கு நெருங்கியவர்களுக்கு மன்னிப்பு உத்தரவுகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். இதுவரை இதுபோல இரண்டு பட்டியல்கள் வெளியாகியுள்ளது. அதில் அவரது தேர்தல் பிரசார மேலாளர் பால் மனாஃபோர்ட், முன்னாள் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன், சம்பந்தி சார்லஸ் குஷ்னர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தது.

அமெரிக்கக் கலவரம்

அமெரிக்கக் கலவரம்

முன்னதாக, கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் இரு காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் டிரம்பின் தூண்டுதலாலேயே நடைபெற்றதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். அவரை பதவியிலிருந்து நீக்கும் தீர்மானமும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், அடுத்து, இதைக் காரணமாகக் கூறி வரும் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடுவதைத் தடை செய்யவும் ஜனநாயகக் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

சுய மன்னிப்பு

சுய மன்னிப்பு

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து தன்னை தானே மன்னித்துக் கொள்ளும் உத்தரவை டிரம்ப் பிறப்பிக்கவுள்ளார் என்று கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. அப்படி செய்யும்பட்சத்தில், அமெரிக்க வரலாற்றிலேயே தன்னை தானே மன்னித்துக் கொண்ட முதல் அதிபர் என்ற பெயரைப் பெறுவார்.

அதிகாரம் உள்ளதா?

அதிகாரம் உள்ளதா?

இருப்பினும், ஒருவர் தன்னை தானே மன்னித்துக் கொள்ளும் அதிகாரத்தை அமெரிக்க அரசியலமைப்பு வழங்கவில்லை என்ற சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். டிரம்ப் யார் மீதான குற்றச்சாட்டிற்கும் மன்னிப்பு வழங்க முடியும். இருப்பினும் ஒருவரது சொந்த குற்றச்சாட்டுகளை அவரே விசாரணை செய்யும் அதிகாரத்தை அமெரிக்க அரசியலமைப்பு வழங்கவில்லை. எனவே, அவரால் சுய மன்னிப்பு வழங்க முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே நேரம், மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தின் கீழ் சுயமன்னிப்பை வழங்கலாம் என்றும் மற்றொரு பிரிவு கூறுகின்றனர்.

இருவேறு கருத்து

இருவேறு கருத்து

சுய மன்னிப்பை அளித்தால் தான் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொள்வது போல ஆகிவிடும் என்று டிரம்ப் ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இருப்பினும், நாடாளுமன்ற கட்டட வன்முறைச் சம்பவத்தில் டிரம்ப் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 2024ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். எனவே சுய மன்னிப்பை அளித்துக்கொள்வது சரியாக இருக்கும் என்று மற்றொரு தரப்பு தெரிவித்தது.

டிரம்ப் பெயர் இல்லை

டிரம்ப் பெயர் இல்லை

மேலும், இது தொடர்பாக டிரம்ப் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இறுதிக்கட்டமாக மன்னிப்பு உத்தரவை வழங்க சுமார் 100 பேர் கொண்ட பட்டியலை டிரம்ப் தயார் செய்துள்ளதாகவும், ஆனால் அதில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்றும் டிரம்பிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
U.S. President Donald Trump at this point is opting not to issue a pardon for himself as he prepares an expansive list of more than 100 pardons and commutations for release on Tuesday, a source familiar with the effort said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X