வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.. அமெரிக்கா அதிபராக டிரம்ப் வெளியிட்ட கடைசி வீடியோ.. உருக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வேன் என்றும் பிடனுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகவும், இன்றுடன் விடைபெறும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பிரியாவிடை வீடியோவில் கூறியுள்ளார்.

முன்னெப்போதையும் விட, அமெரிக்கர்கள் தாங்கள் பகிரந்து கொள்ள வேண்டிய நற்பண்புகளுடன் ஒன்றுபட வேண்டும். இதன் மூலம் பாகுபாடு அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் டிரம்ப் தனது வீடியோவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். அதேநேரம் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இன்று அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

சிறு வயதில் திக்கிப்பேசிய ஜோ பிடன் இன்று அமெரிக்க அதிபராக மிக நீண்ட உரையாற்றுகிறார் சிறு வயதில் திக்கிப்பேசிய ஜோ பிடன் இன்று அமெரிக்க அதிபராக மிக நீண்ட உரையாற்றுகிறார்

பெரும் சர்ச்சை

பெரும் சர்ச்சை

முன்னதாக டிரம்ப், ஜோ பிடனின் வெற்றியை ஏற்காமல் மோசடி செய்து வாங்கப்பட்ட வெற்றி என்று ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டி வந்தார். நீதிமன்றங்களையும் நாடி வந்தார். ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் அவை அனைத்தும் தள்ளுபடியாகின. இதற்கிடையே டிரம்பின் ஆதரவாளர்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையானது. அதன்பின்னரே டிரம்ப் அமைதியானர். அதிகார மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டார்.

வார்த்தைகள் விவரிக்க முடியாது

வார்த்தைகள் விவரிக்க முடியாது

இன்றுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடைபெறுகிறார். இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணிக்குமேல் ஜோ பிடன் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்கிறார். இன்று அதிபராக பதவி வகிக்கும் கடைசி நாள் என்பதால் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் டிரம்ப். அந்த வீடியோவில், இவ்வளவு நாள் அமெரிக்காவின் அதிபராக பணியாற்றியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

ஜோ பிடனுக்கு வாழ்த்துக்கள்

ஜோ பிடனுக்கு வாழ்த்துக்கள்

இந்த வாரம், புதிய நிர்வாகம் தனது பணிகளை துவங்குகிறது. அந்த நிர்வாகம் (பிடன்) அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருக்க வேண்டும். அந்த நிர்வாகத்தின் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன். புதிய நிர்வாகத்திற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக முக்கியமான விஷயம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

நற்பண்புகள்

நற்பண்புகள்

முன்னெப்போதையும் விட, அமெரிக்கர்கள் தாங்கள் பகிரந்து கொள்ள வேண்டிய நற்பண்புகளுடன் ஒன்றுபட வேண்டும். இதன் மூலம் பாகுபாடு அற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும்" என்று டிரம்ப் கூறியுள்ளார்.

English summary
praying for the success of Joe Biden in keeping America safe and prosperous and extending his best wishes, outgoing US President Donald Trump in his farewell video message
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X