வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஆப்பு வைக்கும் டிரம்ப்.. டிக்டாக்கை அடுத்து அலிபாபாவிற்கும் அதிரடி செக்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டிக்டாக் ஆப்பிற்கு தடை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா உள்ளிட்ட பிற சீன நிறுவனங்களுக்கான தடையை நீட்டிக்க பரிந்துரைக்க வாய்ப்பு உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended Video

    சீனாவின் அலிபாபாவை முடக்க டிரம்ப் அதிரடி திட்டம்

    சீனத்திற்கு சொந்தமான அலிபாபா போன்ற பிற நிறுவனங்களை தடை செய்வீர்களா என்று கேட்டதற்கு, ட்ரம்ப், "சரிதான், நாங்கள் மற்ற விஷயங்களையும் பார்க்கிறோம். ஆம்" என்று பதிலளித்தார்.

    லடாக் எல்லையில் சீனா அத்துமீறி தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதன்பின்னர் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இதனிடையே சீன அரசிற்கு பொதுமக்களின் தகவல்கள் பகிரப்படும் என்று அச்சம் எழுந்தததால் சீனாவின் சமூக ஊடகமான டிக்டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு இந்தியா தடை விதித்தது.

    தாவுவதற்கு தயாரான அமைச்சர்..குறுக்கே பாய்ந்து டிஸ்மிஸ் செய்த நிதீஷ் குமார்.. பீகாரில் கலகல!தாவுவதற்கு தயாரான அமைச்சர்..குறுக்கே பாய்ந்து டிஸ்மிஸ் செய்த நிதீஷ் குமார்.. பீகாரில் கலகல!

    டிக்டாக் தடை

    டிக்டாக் தடை

    இந்த தடையை மேற்கோள் காட்டி, டிரம்ப் ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை அச்சுறுத்தியதாக கூறி டிக்டாக் மற்றும் வெச்சாட் ஆகியவை அமெரிக்காவில் இயங்குவதற்கு தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.

    தனிப்பட்ட தகவல்கள்

    தனிப்பட்ட தகவல்கள்

    சீன நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாக குற்றம்சாட்டி தான் டிரம்ப் அதை அமெரிக்காவில் தடை செய்துள்ளார்.

    உளவு பார்க்கும் வகையில்

    உளவு பார்க்கும் வகையில்

    டிக்டாக் அதன் பயனர்களிடமிருந்து ஏராளமான தகவல்களை தானாகவே எடுப்பதாகவும், இந்த தரவு சேகரிப்பு ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்கர்களின் தனிப்பட்ட மற்றும் தனியுரிம தகவல்களை அணுக அனுமதிக்கும் அச்சுறுத்தல் உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் இருப்பிடங்களை கண்காணிக்க சீனாவை அனுமதிக்கும் வகையில் உள்ளது. பிளாக் மெயில் செய்யும் வகையில் தனிப்பட்ட தகவல்களை ஆவணங்களை உருவாக்கவும் . பெருநிறுவனங்களை உளவு பார்க்கும்வகையில் இருக்கிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    அமெரிக்கா ஏற்கவில்லை

    அமெரிக்கா ஏற்கவில்லை

    டிக்டாக் இதனை மறுத்ததுடன் தனது அமெரிக்க பயனர் தரவுகளை ஏற்கனவே அமெரிக்காவை தளமாகக் கொண்ட சேவையகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், சிங்கப்பூரில் காப்புப் பிரதி எடுக்கப்படுவதாகவும் கூறியிருந்தது. ஆனால் அமெரிக்க அரசு இந்த பதிலை ஏற்கவில்லை. இதனிடையே அலிபாபா போன்ற பிற சீன நிறுவனங்களை தடை செய்யவும் டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.

    English summary
    After banning short video-making app TikTok, US President Donald Trump on Saturday suggested that he may extend the ban on other Chinese companies, including, technology giant Alibaba
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X