வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அந்த அழகிய முகம்.. அதைத் தொட்டே ஒரு வாரமாச்சுங்க.. டிரம்புக்கு வந்த கொரோனா சோதனை!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் காரணமாக முகத்தை தொட்டே ஒரு வாரம் ஆனது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Corona Virus Symptoms | Precautions

    கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் முதல் முறையாக வுகான் நகரத்திலிருந்து பரவியது. இந்த வைரஸ் நோய் வந்தால் சாதாரண சளி, காய்ச்சல், மூச்சுவிட சிரமம், கிட்னி பாதிப்பு வரை பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும். இதன் மூலம் மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    7ஆவது வைரஸ்

    7ஆவது வைரஸ்

    கொரோனா குடும்பத்தில் இது 7 ஆவது வைரஸ் என்றாலும் இதற்கு முன்னர் இப்படிப்பட்ட தீவிர வைரஸை பார்த்ததே இல்லை என கூறப்படுகிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த நோய்க்கு 89 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 3000-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டனர்.

    இந்தியா

    இந்தியா

    இந்த நிலையில் இந்த நோய் இந்தியாவுக்கும் பரவி வருகிறது. அமெரிக்காவில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    தப்பிக்க

    தப்பிக்க

    வெள்ளை மாளிகையின் ஒருங்கிணைப்பாளர் தெபோரா பிர்ஸ் கூறுகையில், கைகளை கழுவுவதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அது போல் முகத்தை கழுவுவதாலும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்றார்.

    நகைச்சுவை

    நகைச்சுவை

    இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் கூறுகையில் கொரோனா வைரஸ் அச்சத்தால் தனது முகத்தை ஒரு வார காலமாக தொடவில்லை. அதை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்றார். இவரது இந்த விஷயத்தை மிகவும் நகைச்சுவையாக கூறியிருந்தார்.

    English summary
    Trump jokes about struggle of not touching his face because of Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X