வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த கிம்-ட்ரம்ப் சந்திப்பு.. ரிசல்ட் சரியில்லையே!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வடகொரியா அதிபர் கிம் ஜான் உன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹானோயில் கடந்த இரண்டு நாட்களாக, நடைபெற்ற நிலையில், எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிம்- ட்ரம்ப் நடுவேயான, சந்திப்பு நிறைவடைந்தது. ஆனால், எதிர்பார்த்த பலன்தான் கிடைக்கவில்லை. தங்கள் மீது அமெரிக்கா பிறப்பித்துள்ள பொருளாதார தடைகளை விலக்க வட கொரியா முன்வைத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்காததுதான்,

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சான்டர்ஸ் இதுபற்றி கூறியுள்ளதாவது: மிகவும் ஆக்கப்பூர்வமான் சந்திப்பாக அமைந்தது. அணு ஆயுதங்களை அழித்தல், பொருளாதாரம் ஆகியவற்றை முன்னெடுப்பது தொடர்பாக பல வழிகள் குறித்துப் பேசினோம்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இந்த சந்திப்பின்போது, எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. ஆனால் இரு நாடுகளின் குழுக்களும் எதிர்காலத்தில் சந்திக்க வாய்ப்புகள் உள்ளன, என்றார். இதேபோல இருநாட்டுத் தலைவர்களின் கூட்டறிக்கை எதுவும் வெளியிடவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே, வடகொரியா அடுத்தடுத்து 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கண்டனத்தை வட கொரியா கண்டுகொள்ளவில்லை.

அமெரிக்கா மோதல்

அமெரிக்கா மோதல்

வட கொரியா மீது, அமெரிக்கா புதிதாக பொருளாதார தடைகளை விதித்தபோதிலும் கூட, தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா பங்கேற்ற பிறகு இணக்கம் ஏற்பட ஆரம்பித்தது.

சிங்கப்பூர் சந்திப்பு

சிங்கப்பூர் சந்திப்பு

இதையடுத்து முதலாவது முறையாக கடந்த ஆண்டு, ஜூன் மாதம், சிங்கப்பூரில், ட்ரம்ப் மற்றும், கிம் ஆகிய இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இப்போது 2வது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை வெளியிட்டனர்.

முந்தைய கூட்டறிக்கை

முந்தைய கூட்டறிக்கை

2018 ஆம் ஆண்டு, ஏப்ரலில் போடப்பட்ட பன்முன்ஜோம் பிரகடனத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், வட கொரியா அணு ஆயுதங்களை முழுவதுமாக கைவிட நடவடிக்கை எடுக்கும் என்பது உட்பட பல முக்கிய அம்சங்கள் அந்த கூட்டறிக்கையில் இடம் பெற்றிருந்தன.

English summary
US President Donald Trump's second summit with North Korean leader Kim Jong-un concluded earlier than schedule on Thursday, February 28, with the former addressing a solo press conference in Hanoi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X