வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க வரலாற்றில் கண்ணியம் மீறிய டிரம்ப்.. விடைபெறும் நாளில் பாரம்பரியத்தை உடைத்தார்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபர் பதவியேற்கும் அன்று நடைபெறும் பாரம்பரியங்களை உடைத்துக் கொண்டு டிரம்ப் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி சொந்த ஊரான புளோரிடாவுக்கு செல்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றி பெற்றார். அதேநேரம் டிரம்ப் படுதோல்வி அடைந்ததால், தனது தோல்வியை ஏற்க மறுத்து நீதிமன்றங்களை நாடினார்.

ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் டிரம்பின் முறையீடுகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதற்கிடையே ஜோ பிடன் வெற்றிபெற்றதாக கடந்த 6ம் தேதி நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் திடீரென உள்ளே புகுந்த வன்முறை வெறியாட்டம் ஆடினர். இதில் 4பேர் பலியாகி உள்ளனர். உலகமே கொதித்து எழுந்த நிலையில் டிரம்ப் அதன்பின்னர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.

பிடன் பதவியேற்பு

பிடன் பதவியேற்பு

அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்கும் நிகழ்ச்சி உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு மேல்) நடைபெறுகிறது.. இதில் அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிசும் பதவியேற்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிடாலில் உள்ள நாடாளுமன்ற வெளிவளாகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

பங்கேற்க மாட்டேன்

பங்கேற்க மாட்டேன்

பதவி ஏற்ற பின்னர் அதிபர் ஜோ பிடன் ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் வெள்ளை மாளிகையில் குடியேறுவார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று ஏற்கனவே டிரம்ப் அறிவித்துவிட்டார். ஆனால் முன்னாள் அதிபர்களான பராக் ஒபாமா மற்றும் ஜார்ஜ் டபிள்யு புஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

புதிய அதிபர்

புதிய அதிபர்

இதற்கிடையே அமெரிக்க வரலாற்றில் இதுவரை பதவி மாற்றம் சுமூகமாகவே நடந்துள்ளது. பதவி மாற்றத்திற்கான பராம்பரிய பழக்கமும் உள்ளது. பதவி ஏற்பு அன்று காலை வெளியேறும் அதிபர்., புதிய அதிபரை வரவேற்பார். புதிய அதிபர் அவரது மனைவி ஆகியோர் வெளியேறும் அதிபர் குடும்பத்தினருடன் அமர்ந்து காலை உணவு சாப்பிடுவர். இரு குடும்பத்தினரும் இணைந்து பதவி ஏற்பு விழா நடக்கும் நாடாளுமன்றத்திற்கு செல்வார்கள்.

டிரம்ப் மீறினார்

டிரம்ப் மீறினார்

இந்த நடைமுறையின் படிதான் இதுவரை சுமூகமாக பதவியேற்பு விழா அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. இப்படி பதவியேற்பு விழா நடைபெறுவது தான் அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்று ஆகும். இந்த கண்ணியத்தை ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி தலைவர்கள் காப்பாற்றி வந்தார்கள். ஆனால் இந்த கண்ணியத்தை டிரம்ப் மீறி உள்ளார். காலையிலேயே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறும் டிரம்ப், குடும்பத்துடன் தனது சொந்த ஊரான புளோரிடாவுக்கு குடிபெயர்கிறார்.

English summary
Breaking with traditions that take place on the day of the inauguration of the new President of the United States, Trump leaves the Presidential Palace and travels to his hometown of Florida.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X