வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரே மேடையில்.. டெக்ஸாஸிஸ் மாஸ் காட்ட போகும் டிரம்ப், மோடி

ஒரே மேடையில் மோடியும், டிரம்ப்பும் உரையாற்ற உள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சமீப காலங்களில்... ரெண்டு பெரிய நாட்டு தலைவர்கள் யாருமே இதுவரைக்கும் ஒரே மேடையில், ஒன்றாக தோன்றியதே இல்லையாம்.. அப்படி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் கூடிய சீக்கிரம் நடக்க போகிறது.. ஆம்! அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், நம் பிரதமர் மோடியும்தான் ஒரே மேடையில் தோன்றி உரையாற்றி மாஸ் காட்ட போகிறார்கள்!

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொஞ்ச காலமாகவே சரியான வர்த்தக உறவு இல்லை. அதனால்தானே என்னவோ இரு நாட்டு தரப்பிலும் ஒருசில முன்னேற்றத்தக்கத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஐநா சபையின், 74வது வருட கூட்டம், நியூயார்க்கில் வரும், 24 முதல், 30ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி 21ம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.

தமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்புதமிழகத்தில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு பைசா கூட வரி கிடையாது.. அரசு அறிவிப்பு

மோடி நலமா?

மோடி நலமா?

அங்கே, டெக்சாஸ் மாகாணத்தில், 22ம் தேதி, அமெரிக்க வாழ் இந்தியர்களால் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின் பெயர் "மோடி நலமா?" என்பது! இதில்தான் நம் பிரதமர் பங்கேற்கிறார். எப்படியும் இந்த நிகழ்ச்சிக்கு 50 ஆயிரத்துக்கும் மேல் மக்கள் கலந்து கொள்வார்கள் என்கிறார்கள்.

வெள்ளை மாளிகை

அதனால் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் அங்கு தடபுடலாக நடந்து வருகிறது. இதற்கான டிக்கெட் கூட அவ்வளவு சீக்கிரம் விற்று தீர்ந்து விட்டதாம். இந்த கூட்டத்தில்தான் அதிபர் டிரம்பும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை வெள்ளை மாளிகையே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

உறவு

உறவு

அது மட்டுமில்லை.. இந்த இரண்டு நாட்டு தலைவர்களின் சந்திப்பின் மூலம், "மிகப் பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான உறவு இன்னும் மேம்படும்" என்று உறுதியாக சொல்கிறது வெள்ளை மாளிகை தரப்பு. அநேகமாக எரிவாயு துறையில் இந்தியா - அமெரிக்காவுக்கு இடையில் ஏதேனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றுகூட எதிர்பார்க்கப்படுகிறது.

இம்ரான்கான்

இம்ரான்கான்

இது எல்லாவற்றையும்விட மிக சிறப்பு என்னவென்றால், ஐநா பொதுசபை கூட்டத்தில் மோடி உரையாற்ற உள்ளார். மோடி உரைக்கு பிறகுதான் இம்ரான்கான் பேச உள்ளார். எப்படியும், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து இம்ரான் பாயின்ட் பாயின்ட்டாக எடுத்து வைத்துபேசுவார் என்று தெரிகிறது.

காஷ்மீர் விவகாரம்

இதேபோலதான், காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்க, எம்பி.க்கள் கவலை தெரிவித்திருந்தனர். காஷ்மீர் விவகாரம் ரொம்பவே அபாயமான கட்டத்தில் இருக்கிறது என்று சொன்ன டிரம்ப், ஒரு கட்டடத்தில், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யவும் தயார் என்றுகூட சொல்லி இருந்தார்.

மாஸ்

மாஸ்

அதனால் மோடியின் இந்த பயணமானது ஜம்மு, காஷ்மீர் விவகாரம் சம்பந்தமாகவும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஒரு பக்கம் தந்துள்ளது. அதேபோல, இரு நாட்டு தலைவர்களும் ஒரே மேடையில் மக்கள் முன்பு தோன்றி உரையாற்றுவதும் கூடுதல் வியப்பு கலந்து மகிழ்ச்சியை இன்னொரு பக்கம் ஏற்படுத்தி வருகிறது. எப்படியோ.. ஒரே மேடையில் மாஸ் காட்ட போகும் இப்படி ஒரு வரலாற்று நிகழ்வினை காண உலக மக்கள் தயாராகி விட்டனர்!

English summary
Donald Trump may share stage with PM Narendra Modi during 'Howdy Modi' event in Newyork
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X