வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவும் முக்கியம்.. சீனாவும் முக்கியம்.. திடீரென டிரம்ப் எடுத்த முடிவு.. என்ன சொன்னார்?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா மக்களிடையே அமைதியை ஏற்படுத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் என்று அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சீனா இடையேயான லடாக் எல்லை பிரச்சனையில், கடந்த பல வாரங்களாக, அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் அவரது அரசு சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவாக முன்வந்தது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் லாரி குட்லோ இந்தியாவை ஒரு சிறந்த நட்பு நாடு என்று வர்ணித்தார். அதிபர் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியின் சிறந்த நண்பர் என்று கூறினார். கடந்த புதன்கிழமை, வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ பேசும் போது இந்தியா அமெரிக்காவின் சிறந்த பங்காளியாக இருந்துள்ளது என்று கூறியிருந்தார்.

நான்கே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது நான்கே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை கடந்தது

சிறந்த நட்புறவு

சிறந்த நட்புறவு

செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு அவர் பதில் அளிக்கும் போது, "இந்தியா அமெரிக்காவின் சிறந்த பங்காளியாக இருந்துள்ளது ... அவர்கள் எங்களுடைய முக்கியமான பங்காளிகள். இந்திய வெளியுறவு அமைச்சருடன் எனக்கு ஒரு சிறந்த நட்புறவு இருக்கிறது. நாங்கள் பலவிதமான பிரச்சினைகள் பற்றி அடிக்கடி பேசினோம். எல்லையில் சீனா நடத்திய மோதலைப் பற்றி நாங்கள் பேசினோம் சீன தொலைதொடர்பு உள்கட்டமைப்பிலிருந்து வெளிப்படும் ஆபத்து குறித்து நாங்கள் பேசினோம்" என்று கூறினார்.

எங்கள் நண்பர் இந்தியா

எங்கள் நண்பர் இந்தியா

இதனிடையே ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் செய்தியாளர்களிடம் இந்தியா பற்றி கூறுகையில், சீனா இந்தியாவுடன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து வருகிறது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அமெரிக்காவின் சிறந்த நண்பர் . பிரதமர் "மோடியும் ஜனாதிபதி டிரம்பும் ஒரு சூப்பர் நட்புறவு கொண்டவர்கள். உண்மையில், COVID-19 நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் அதிபர் டிரம்ப் சென்ற கடைசி வெளிநாட்டு பயணம், இந்தியாவுக்குதான், அங்குள்ள இந்திய மக்களிடம் எங்களை பற்றி பெரும் வரவேற்பு இருந்தது. அவர்களுடன் எங்களுக்கும் நிறைய பொதுவான விஷயங்கள் உள்ளன., நாங்கள் ஆங்கிலம் பேசுகிறோம், நாங்கள் ஜனநாயக நாடுகள். இந்தியாவுடன் வளர்ந்து வரும், மிகவும் வலுவான உறவை நாங்கள் பெற்றுள்ளோம், "என்று கூறினார்.

இந்தியர்கள் வரவேற்பு

இந்தியர்கள் வரவேற்பு

வெள்ளை மாளிகையின் இந்த அறிக்கையை வரவேற்ற இந்திய அமெரிக்க நிதிக் குழுவின் இணைத் தலைவர் அல் மேசன் முன்னாள் அதிபர்கள் போலல்லாமல், அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசி வந்துள்ளார். "ஒவ்வொரு முந்தைய அதிபர்களும் - கிளின்டன் அல்லது சீனியர் புஷ் அல்லது ஜூனியர் புஷ் அல்லது ஒபாமா என ஜனநாயகக் கட்சியோ அல்லது குடியரசுக் கட்சியினராக இருந்தாலும், சீனாவை பாதிக்கும் என்ற அச்சத்தில் இந்தியாவுடன் பகிரங்கமாக பக்கபலமாக இருப்பதற்கு மிகவும் பயந்து வந்தார்கள் என்பதை பெரும்பாலான இந்திய-அமெரிக்கர்கள் கவனித்துள்ளனர். அதிபர் டிரம்ப் மட்டுமே இந்தியாவிற்கு ஆதரவாக தைரியமாக பேசுகிறார்.... நான் இந்தியாவை நேசிக்கிறேன், அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது ... அமெரிக்கா இந்தியாவுடன் நிற்கிறது என்று கூறினார். இந்தியாவில் நடைபெற்ற நமஸ்தே பேரணியில் டிரம்ப் கலந்து கொண்டார்" என்று மேசன் அதிபர் டிரம்ப்பை பாராட்டினார்.

Recommended Video

    America VS China | Hong Kong’s special status-ஐ ரத்து செய்த Trump | Oneindia Tamil
    அமைதியை ஏற்படுத்த

    அமைதியை ஏற்படுத்த

    இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்கானி வியாழக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசும் போதும் "அவர் (டிரம்ப்) நான் இந்திய மக்களை நேசிக்கிறேன், நான் சீன மக்களை நேசிக்கிறேன், மக்களுக்கு அமைதியை நிலைநாட்ட எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறேன்" என்று தெரிவித்தார் என கூறினார். இதன் மூலம் இரு நாட்டுக்கும் இடையே எல்லை பிரச்சனையில் சமாதானம் செய்ய டிரம்ப் விரும்புவது தெரிகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் விஷயத்திலும் இப்படித்தான் டிரம்ப் பேசியிருந்தார்.

    English summary
    Trump On India-China: " I love the people of India and I love the people of China and I want to do everything possible to keep the peace for the people,"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X