வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பொத்திப் பொத்தி பாதுகாத்தும்.. டிரம்ப் உதவியாளரை தொற்றியது கொரோனா.. !

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு வந்திருப்பதால் வெள்ளை மாளிகை பதட்டம் அடைந்துள்ளது.

Recommended Video

    டிரம்ப் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு

    அமெரிக்க அதிபருக்கு உணவு பரிமாறும் குழுவில் இடம் பெற்றுள்ள ஒருவருக்கே கொரோனா பாதிப்பு வந்துள்ளது. இத்தனைக்கும் அவர் மாஸ்க் எல்லாம் போட்டு பக்காவான முன்னேற்பாடுகளுடன் இருந்தும் கூட அவரை கொரோனா தாாக்கியுள்ளது. இதையடுத்து வெள்ளை மாளிகையில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஆனால் அதிபர் டிரம்ப் இதுகுறித்து பதட்டம் அடையாமல்தான் உள்ளார். இதுகுறித்து டிரம்ப் கூறுகையில், பாதிக்கப்பட்ட இந்த உதவியாளருடன் எனக்கு நேரடி தொடர்பு எதுவும் இல்லை தனிப்பட்ட முறையில் நான் அவரிடம் பழகவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். வழக்கமாக செய்யப்படும் பரிசோதனைகளின்போதுதான் இந்த உதவியாளருக்கு கொரோனா வந்திருப்பது தெரிய வந்தது.

    ஒரே நாளில் 4 பேர் பலி.. சென்னையை உலுக்கிய கொரோனா.. அடுத்தடுத்து எப்படி நடந்தது.. முக்கிய ஒற்றுமை! ஒரே நாளில் 4 பேர் பலி.. சென்னையை உலுக்கிய கொரோனா.. அடுத்தடுத்து எப்படி நடந்தது.. முக்கிய ஒற்றுமை!

    டிரம்ப் ஆச்சரியம்

    டிரம்ப் ஆச்சரியம்

    அதேசமயம், இந்த புதிய நிகழ்வு குறித்து டிரம்ப் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,இது சற்று வினோதமாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆரம்பத்திலிருந்தே கொரோனா குறித்து அலட்சியமாகவே இருந்து வருகிறார் டிரம்ப். மாஸ்க் போட மாட்டேன் என்றும் அவர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்து வருகிறார். அவரது கொரோனா கொள்கை குறித்து அமெரிக்கர்கள் கடும் கோபம் மற்றும் அதிருப்தியில் உள்ளனர்.

    முன்னெச்சரிக்கையாக இருந்தும்

    முன்னெச்சரிக்கையாக இருந்தும்

    இந்த நிலையில் வெள்ளை மாளிகை ஊழியர் ஒருவருக்கே கொரோனா வந்திருப்பது அங்கு அதிர்ச்சியை தருவதாக உள்ளது. இத்தனைக்கும் மாஸ்க் உள்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அங்கு பின்பற்றப்படுகின்றன. அதையும் தாண்டி கொரோனா தாக்கியிருப்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

    நாங்க நல்லாருக்கோம்

    நாங்க நல்லாருக்கோம்

    இதுகுறித்து செய்தியாளர்களிடையே டிரம்ப் பேசுகையில், வெள்ளை மாளிகையில் பலரும் மாஸ்க் அணிகின்றனர். நான், எனது மனைவி, மகன் ஆகியோர் நல்ல நலமுடன் உள்ளோம். அனைவரும் கொரோனா போராளிகள். உங்களைப் போலத்தான் நாங்களும் போராளிகள் என்றார் டிரம்ப். வெள்ளை மாளிகைக்குள் கொரோனா வந்து விட்டதால் அதிபர் மற்றும் துணை அதிபர் ஆகியோருக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை துணை அதிபர் மைக் பெனஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

    அமெரிக்காவில் மோசம்

    அமெரிக்காவில் மோசம்

    உலகிலேயே அமெரிக்காதான் கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் இதுவரை 12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அமெரிக்கர்களில் பலரும் எங்களுக்கு லாக்டவுன் வேண்டாம்.. சுதந்திரம் வேண்டும் என்று முழங்கிக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    US president Donald Trump's aide has been tested corona positive.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X