வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தொற்றுநோயின் கோர முகம்.. பார்க்க பார்க்க சீனா மீது கோபம் வருது.. டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா தொற்றுநோய் அதன் கோர முகத்தை பரப்புகிறது. அதை பார்க்கும் போது சீனா மீது எனக்கு கோபம் கோபமாக வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Corona கொடுமையை பார்க்கும் போது China மீது கோபம் வருகிறது - Donald Trump

    அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,27,853 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 1.30 லட்சமானது. டிரம்ப் ஏற்கெனவே அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தற்போது 1.30 லட்சம் பேர் அமெரிக்காவில் இறந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டரில் கூறியிருக்கையில், நான் பார்க்கிறேன், இந்த கொரோனா தொற்றுநோய் உலகம் முழுவதும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது.

    பாதிப்பு எண்ணிக்கையிலும் பாதி.. பலி எண்ணிக்கையிலும் பாதி.. அமெரிக்காவை பின்தொடரும் பிரேசில் பாதிப்பு எண்ணிக்கையிலும் பாதி.. பலி எண்ணிக்கையிலும் பாதி.. அமெரிக்காவை பின்தொடரும் பிரேசில்

    சீனா மீது கோபம்

    சீனா மீது கோபம்

    அமெரிக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்க்கும்போது எனக்கு சீனா மீது மேலும் மேலும் கோபப்படுகிறேன். மக்கள் இதை அச்சத்துடன் பார்ப்பதை என்னால் உணர முடிகிறது என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

    முழுகட்டுப்பாடு

    முழுகட்டுப்பாடு

    பொதுமக்கள் கொரோனாவை தடுக்க ஒத்துழைப்பு அளிக்காவிட்டால் அந்த எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பாகும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து தொற்றுநோய் துறை நிபுணர் அந்தோணி பவுசி கூறுகையில் அனைத்தும் தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது நாம் முழுமையான கட்டுப்பாட்டில் இல்லை என்றார்.

    டிரம்ப்

    கொரோனா வைரஸ் பரப்பியது சீனாதான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அது போல் கொரோனா வைரஸை சீனா வேண்டுமென்றே பரப்பி விட்டிருக்கலாம் என்றும் அவ்வாறு பரப்பிவிட்டிருந்தால் அதற்கு சீனா அதிக விலை கொடுக்க நேரிடும் என்றும் டிரம்ப் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தார்.

    குற்றச்சாட்டுகள்

    குற்றச்சாட்டுகள்

    கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றும் வுகான் வைரஸ் என்றும் குங்ஃப்ளூ வைரஸ் என்றும் டிரம்ப் அழைத்து வந்தார். மேலும் இது குறித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்துவருவதாகவும் அந்த ஆய்வுகளில் சீனா குறித்து தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது.

    English summary
    American President Donald Trump says that he is getting more and more angry on China while seeing ugly face of Coronavirus across the world.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X