வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனா மீது மிக மிக கடும் கோபத்தில் இருக்கிறேன்.. டிரம்ப் கருத்து.. இந்தியாவின் செயலுக்கு வரவேற்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் தொற்றுநோயை உலகம் முழுவதும் பரப்பியதற்காக சீனா மீது "மிக மிக கடும் கோபத்தில் இருப்பதாக" அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கிடையே சீனாவின் ஆப்களுக்கு இந்தியா தடை விதித்ததை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

Recommended Video

    India China Border Fight-ல் China-வறுத்தெடுக்கும் America | White House Statment

    சீனாவில் இருந்து கடந்த டிசம்பரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த தொற்று நோய் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு மின்னல்வேகத்தில் பரவுகிறது.

    இதனால் கொரோனா தொற்று நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் ஒரு கோடியே 8 லட்சத்தை தாண்டிவிட்டது. உலகிலேயே கொரோனாவால் அமெரிக்காதான் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 27லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1.30லட்சம் பேர் அமெரிக்காவில் மட்டும் கொரோனாவால் இறந்துள்ளனர்.

    Video: வாங்க வாஷிங்டன் வரை வாக்கிங் போய்ட்டு வரலாம்.. பயணங்கள் முடிவதில்லை! Video: வாங்க வாஷிங்டன் வரை வாக்கிங் போய்ட்டு வரலாம்.. பயணங்கள் முடிவதில்லை!

    சீனாவிற்கு பங்கு

    சீனாவிற்கு பங்கு

    அமெரிக்காவின் பொருளாதாரமும், மனித வளமும் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உலகப் பொருளாதாரத்தை அழித்தது மற்றும் கொரோனா வைரஸ் பரவியதால் உலகம் முழுவதும் மக்கள் மிகப்பெரிய அழிவை சந்தித்ததற்கு சீனாவிற்கு பெரும் பங்கு இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    அமெரிக்காவிற்கு சேதம்

    அமெரிக்காவிற்கு சேதம்

    இந்நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட ட்வீட் பதிவில், "தொற்றுநோய் அதன் அசிங்கமான முகத்தை உலகம் முழுவதும் பரப்புவதை நான் பார்க்கும்போது, அது அமெரிக்காவிற்கு செய்துள்ள பெரும் சேதம் உட்பட, பெரும் பாதிப்பிற்காக, நான் சீனா மீது மிக மிக கடும் கோபத்தில் இருக்கிறேன். மக்களிடமும் அதைப் பார்க்க முடியும், நானும் அதை உணர்ந்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.

    டிரம்ப் பதில் இல்லை

    டிரம்ப் பதில் இல்லை

    ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா கொண்டுவருவதற்கு எதிராக டிரம்ப் நேரடியாக இதுவரை பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், சீனா மீது கொரோனாவை சொல்லி டிரம்ப் கடுமையாக கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

    அமெரிக்கா வரவேற்பு

    அமெரிக்கா வரவேற்பு

    இதனிடையே வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ, சீனாவின் மொபைல் ஆப் பயன்பாடுகளுக்கு இந்தியா விதித்த தடையை வரவேற்றுள்ளார். "சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கண்காணிப்பு அரசின் இணைப்புகளாக இந்த ஆப்கள் செயல்பட முடியும். இந்தியாவின் தூய்மையான பயன்பாட்டு அணுகுமுறை அந்த நாட்டின் இறையாண்மையை உயர்த்தும் மற்றும் ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும் " என்று கூறினார்.

    English summary
    US President Donald Trump has said he is become more and more angry at China' , even US welcomed india's ban on Chinese apps.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X