வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வருமான வரியை செலுத்த விரும்பவில்லை- டிரம்ப்.. கோமாளி, மோசமான அதிபர்- ஜோபிடன் விமர்சனம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நான் வருமான வரியை செலுத்த விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கோமாளி என்றும் அவர் அமெரிக்காவே இதுவரை சந்தித்திராத மோசமான அதிபர் என்றும் ஜோபிடன் விமர்சனம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருவதை அடுத்து அந்நாட்டு அரசியல் சட்டத் திட்டத்தின்படி முதல்முறையாக இரு அதிபர் வேட்பாளர்களும் விவாதம் நடத்த தொடங்கினர்.

அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு வருமான வரியே செலுத்தவில்லை என நியூயார்க் டைம்ஸ் குற்றம்சாட்டியிருந்தது. மேலும் 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் கோடி கோடியாக சம்பாதித்த போதிலும் வருமானத்தை குறைத்து காட்டி வெறும் 750 டாலர் மட்டுமே வரியாக செலுத்தினார் என்றும் அந்த நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

Shut up man!... ட்ரம்ப் பொய்களால் கடுப்பாகி ஆக்ரோஷம் காட்டிய ஜோ பிடன் Shut up man!... ட்ரம்ப் பொய்களால் கடுப்பாகி ஆக்ரோஷம் காட்டிய ஜோ பிடன்

மில்லியன் டாலர்கள்

மில்லியன் டாலர்கள்

இதற்கு அதிபர் டிரம்பின் பதில் என்ன என ஜோ பிடன் மடக்கினார். அதற்கு டிரம்ப் பதில் கூறுகையில், நான் இந்த வருமான வரியை செலுத்த விரும்பவில்லை என ஒரே போடாக போட்டார். தொடர்ந்து பேசிய அவர் நான் அதிபரான முதல் இரண்டு ஆண்டுகளில் பல மில்லியன் டாலர்கள் வரி செலுத்தியுள்ளேன் என்றும் கூறினார்.

ஜோ பிடன் கேள்வி

ஜோ பிடன் கேள்வி

வரி செலுத்த மாட்டேன் என்றும், பல மில்லியன் டாலர்கள் வரி செலுத்தியுள்ளேன் என்றும் முன்னுக்குப் பின் முரணாக பேசி பிடனிடம் மாட்டிக் கொண்டு முழித்தார் டிரம்ப். இது போல் டிரம்ப் பல இடங்களில் ஜோ பிடனின் கேள்விகளுக்கு திக்குமுக்காடி போனார்.

மோசமான அதிபர்

மோசமான அதிபர்

இதைத் தொடர்ந்து டிரம்பை ஜோபிடன் ஒரு கோமாளி என்றும் இவரை போன்ற மோசமான அதிபரை அமெரிக்கா இதுவரை கண்டதில்லை என்றும் விமர்சித்தார். டிரம்ப் மற்றும் ஜோ பிடனுக்கு இடையேயான விவாதம் அனல் பறந்ததாக இருந்தது. விவாதத்தின் தொடக்கத்தில் ஜோ பிடன் கூறுகையில், உண்மை என்னவென்றால் டிரம்ப் கூறுவது அனைத்துமே பொய்யானது.

விவாதம்

விவாதம்

அவரது பொய்களை பட்டியலிட நான் இங்கு வரவில்லை. அவர் ஒரு பொய்யர் என்பது அனைவருக்குமே தெரியும் என பிடன் விமர்சித்தார். அப்போது டிரம்ப் குறுக்கே பேச முயன்றார். ஆனால் விடாமல் பேசிய ஜோ பிடன் ஒரு கட்டத்தில் நீங்கள் சற்று வாயை மூடுகிறீர்களா என பேசி விவாதத்திற்கு மேலும் காரசாரமானதாக மாற்றினார்.

இரு வேட்பாளர்கள்

இரு வேட்பாளர்கள்

ஜோபிடனும் டொனால்ட் டிரம்பும் ஒரே நேரத்தில் மேடைக்கு வந்தடைந்தனர். கொரோனா தொற்று வழிகாட்டும் நெறிமுறைகளின்படி இருவரும் கைகளை குலுக்கக் கூடாது என நடுநிலையாளர் கிறிஸ் வால்லஸ் தெரிவித்தார். அப்போது இருவரும் சிரித்தனர். இந்த 90 நிமிட விவாதம் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களுடன் சமூக விலகலுடன் நடந்தது. இரு வேட்பாளர்களும் முகக் கவசம் அணிந்திருக்கவில்லை.

வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

இந்த விவாதத்தில் அதிபர் வேட்பாளர்களின் குடும்பத்தினர் உள்பட 80 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப், மகன் எரிக், மகள்கள் இவான்கா, டிஃப்பானி ஆகியோரும், வெள்ளை மாளிகை அதிகாரி மார்க் மெடோஸும், பிடனின் மனைவி ஜில்லும் கலந்து கொண்டனர்.

English summary
US President Donald trump says I dont want to pay taxes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X