வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே.. தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிய டொனால்ட் டிரம்ப்

Google Oneindia Tamil News

Recommended Video

    Donald Trump: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் அதிரடி முழக்கம்- வீடியோ

    வாஷிங்டன்: என்னை மீண்டும் அதிபராக்கினால் அமெரிக்கா பலம் பொருந்திய நாடாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.

    அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து புளோரிடா மாகாணத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் முறைப்படி அறிவிப்பேன் என டிரம்ப் கூறியிருந்தார்.

    அதன்படி ஆர்லண்டோவில் உள்ள ஆம்வே அரங்கத்தில் ஜனநாயக கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் பங்கேற்றார்.

    ஓம் டிரம்ப்பாய நமஹ.. ஓம் டொனால்டாய நமஹ.. டெய்லி பாலாபிஷேகம் செய்யும் தெலங்கானா கிருஷ்ணன் ஓம் டிரம்ப்பாய நமஹ.. ஓம் டொனால்டாய நமஹ.. டெய்லி பாலாபிஷேகம் செய்யும் தெலங்கானா கிருஷ்ணன்

    உற்சாகம்

    உற்சாகம்

    அப்போது பொதுக் கூட்டத்தில் டிரம்ப் பேசுகையில் 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் கைதட்டி உற்சாகம் அடைந்தனர்.

    வளர்ச்சி

    வளர்ச்சி

    தொடர்ந்து அவர் பேசியதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்றது அமெரிக்க வரலாற்றில் வரையறுக்கப்பட்ட முக்கியமான தருணம். நான் அதிபராக இருந்த போது அமெரிக்கா குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்தது.

    எந்த அதிபர்களும்

    எந்த அதிபர்களும்

    இதனால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு எனக்கு உங்கள் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக தொடர்ந்து வைத்திருப்பேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாங்கள் செய்த நலத்திட்டங்களை வேறு எந்த அதிபர்களும் செய்ததில்லை.

    உறுதி

    உறுதி

    பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மற்ற நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு அமெரிக்கா உயர்ந்துள்ளது. அமெரிக்கா அமெரிக்க மக்களுக்கே என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

    சோஷலிச நாடு

    சோஷலிச நாடு

    குடியரசு கட்சியும் ஊடகங்களும் இணைந்து வதந்தி செய்திகள் மூலம் நம்மை தோற்கடிக்க நினைக்கலாம். ஆனால் அது நடக்காது. குடியரசு கட்சியினர் நாட்டில் சோஷியலிசத்தை திணிக்க பார்க்கிறார்கள். அமெரிக்கா ஒரு போதும் சோஷலிச நாடாக மாறாது என்றார் டிரம்ப்.

    English summary
    American President Donald Trump says that America is only for Americans. At any cost it will not become socialist country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X