வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தட்ரோம்.. தூக்குறோம்.. 2016-ஐ விட அதிக வாக்குகளை பெறுவோம்.. பிடன் தலையில் இடியை இறக்குவோம்.. டிரம்ப்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: 2016-ஆம் ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெறுவேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிபர் டிரம்பும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எரியில் டிரம்ப் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் ஒரு மணி நேரம் பேசினார். அவர் கூறுகையில் ஜோ பிடனும் அவரது எம்பி கமலா ஹாரீஸும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் தெரியுமா?

மருத்துவ நிபுணரை 'முட்டாள்' என அர்ச்சித்த டிரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆவேசம்..!மருத்துவ நிபுணரை 'முட்டாள்' என அர்ச்சித்த டிரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஆவேசம்..!

பணக்காரர்கள்

பணக்காரர்கள்

அமெரிக்காவை சோசலிஷ நாடாக மாற்றிவிடும். இந்த பணக்கார தாராளமய கொள்கை கொண்ட நயவஞ்சகர்களுக்கு நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். வரும் நவம்பர் 3-ஆம் தேதி இடி விழும் அளவுக்கு ஜோ பிடனுக்கு தோல்வி காத்திருக்கிறது. அவர்களை வெளியேற்ற எனக்கு வாக்களியுங்கள்.

கூட்டம் பெரிது

கூட்டம் பெரிது

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலை காட்டிலும் இந்த ஆண்டு நாம் அபார வெற்றி பெறுவோம். தற்போது சேர்ந்துள்ள கூட்டம் மிக பெரிய கூட்டமாக உள்ளது. அவர்கள் இதை ஒரு போதும் மறக்க மாட்டார்கள். கடந்த முறை என்னை வெற்றி பெற வைத்த நீங்கள் யார் என்பதை அறிய முயற்சிக்கிறார்கள்.

பிடனும் டிரம்பும்

பிடனும் டிரம்பும்

என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அப்போது காண்கிறீர்கள் என்றார். பிடன் மற்றும் டிரம்ப் ஆகியோர் இரண்டாவது மற்றும் இறுதி விவாதத்தை வியாழக்கிழமை இரவு நடத்துகிறார்கள். கருத்துக் கணிப்பில் பிடன் முன்னணியில் உள்ளார். ஸ்விங் எனப்படும் மாகாணங்களில் டிரம்ப் பிரசாரம் செய்யும் போது ஏராளமான மக்கள் கூடுகிறார்கள். ஸ்விங் என்றால் சில மாகாணங்களில் யாருக்கு வேண்டுமானாலும் வாக்காளர்கள் ஆதரவு தெரிவிக்கலாம். யாருக்கு தெரிவிப்பார்கள் என்பதை உறுதியாக கணிக்க முடியாத மாகாணங்கள் இவை ஆகும்.

பராக் ஒபாமா

பராக் ஒபாமா

ஜோ பிடனை ஆதரித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். வடக்கு கரோலினாவில் டிரம்ப் பிரசாரம் செய்கிறார். போட்டி அதிகமாக காணப்படும் முக்கிய மாகாணமான இங்கு பிரசாரத்தை நடத்துகிறார். ஏற்கெனவே 35 மில்லியன் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துவிட்டார்கள்.

English summary
US President Donald Trump says that his party will get more votes than 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X