வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா டெஸ்டிங்கில் அமெரிக்காதான் முன்னணி.. இந்தியா கூட நமக்கு அடுத்துதான்.. வம்பிழுக்கும் டிரம்ப்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா சோதனையில் உலகிலேயே அமெரிக்காதான் முன்னணியில் இருக்கிறது என்றும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் இந்தியாவை வம்புக்கு இழுத்துள்ளார்.

உலகில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்காதான். இறப்பிலும் சரி, தினம் உயரும் கேஸ்களிலும் சரி, இந்த வல்லரசு நாடு முன்னணியில் உள்ளது.

அதாவது 38 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 1.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பொருளாதாரத்தை அமெரிக்கா மெதுவாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தொற்று அதிகமாக பரவி வருகிறது.

திருடுவதுதான் தொழில்.. கொரோனா வைரஸ் ஆராய்ச்சியை குறி வைத்த சீன ஹேக்கர்கள்.. அரண்டு போன அமெரிக்கா . திருடுவதுதான் தொழில்.. கொரோனா வைரஸ் ஆராய்ச்சியை குறி வைத்த சீன ஹேக்கர்கள்.. அரண்டு போன அமெரிக்கா .

இறந்தவர்கள்

இறந்தவர்கள்

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில் நாம் ஒரே குடும்பமாக நின்று கொரோனாவால் இறந்த விலைமதிப்பில்லாத உயிர்களுக்காக வருந்துகிறோம். இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாம் நிச்சயம் ஒரு தடுப்பு மருந்தை உருவாக்குவோம் என்றும் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வருவோம் என உறுதியேற்போம்.

12 மில்லியன்

12 மில்லியன்

அமெரிக்காவில் இதுவரை 50 மில்லியன் பேருக்கு கொரோனா சோதனை எடுத்துள்ளோம். அதிகம் பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 12 மில்லியன் பேருக்கு கொரோனா சோதனைகளை செய்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்றவர்கள் எல்லாம் 7 மில்லியன், 6 மில்லியன், 4 மில்லியன் என கொரோனா சோதனை செய்துள்ளனர்.

கொடூரமான வைரஸ்

கொடூரமான வைரஸ்

எனவே டெஸ்டிங் எண்ணிக்கையில் நாம் சரியான முறையில் செய்துள்ளோம் என்றே கருதுகிறேன். சீனா வைரஸான கொரோனா வைரஸ் மிகவும் மோசமான வைரஸாக உள்ளது. இந்த கொடூரமான வைரஸ் எந்த சூழலிலும் சீனாவை விட்டுவெளியேற அனுமதித்திருந்திருக்கக் கூடாது. ஆனால் சீனா அதை செய்துவிட்டது.

Recommended Video

    50 சதவிகித vaccine இந்தியாவுக்கு தான்... Serum CEO சூப்பர் அறிவிப்பு
    நட்புறவு

    நட்புறவு

    இதன் மூலம் உலகையே பாதிப்புக்குள்ளாகிவிட்டது. இளைஞர்களுக்கு லேசான அறிகுறியோ அல்லது அறிகுறி இல்லாமலோதான் உள்ளது. அவர்கள் கொரோனா பாதிப்பிலிருப்பதே அவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. இளைஞர்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். மற்ற நாடுகளுடன் அமெரிக்கா நல்ல நட்புறவை கொண்டுள்ளது என்றார் டிரம்ப்.

    English summary
    US President Donald Trump says that America is the leading in the world with more and more Coronavirus tests. India is in the second place.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X