வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத அதிபர் நான் தான்... பிரிவு உபச்சார விழாவில் டிரம்ப் பேச்சு..!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத அதிபர் தாம் தான் என பிரிவு உபச்சார விழாவில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் அதிபர் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. அதில் பேசிய டிரம்ப், எந்த இடத்திலும் ஜோ பிடனின் பெயரை உச்சரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trump speech, I am the president who will not wage war on any country

அமெரிக்காவின் 45-வது அதிபராக செயல்பட்டு எனது கடமைகளை நிறைவேற்றியிருக்கிறேன். பல விவகாரங்களில் நாம் சாதித்திருக்கிறோம் என்ற பெருமிதத்துடன் உங்கள் முன் நிற்கிறேன்.

எனது பதவிக்காலத்தில் ஏராளமான வரிச்சலுகைகள், சீனா மீதான வரி விதிப்பு, கொரோனாவுக்கு 9 மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடிப்பு, என பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறேன். குறிப்பாக எனது ஆட்சிக்காலத்தின் போதுதான் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மத்திய கிழக்கு நாடுகளில் போரை நிறுத்தி வீரர்களை நாடு திரும்ப வைத்தேன். வன்முறையின்றி, ரத்தமின்றி ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்தியுள்ளேன். அரசியல் வன்முறையை ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன்.

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்... ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை..! வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்... ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை..!

கடந்த 4 ஆண்டுகாலம் எப்படி கழிந்தது என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு எண்ணற்ற காரியங்கள் ஆற்றியிருக்கிறேன். அதிபர் பதவியை விட்டு சென்றாலும் தொடர்ந்து பொதுவாழ்க்கையில் ஈடுபடுவேன். இன்று (புதன்கிழமை) நிகழும் ஆட்சி மாற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரிவு உபச்சார விழாவில் பேசியுள்ள டிரம்ப், ஜோ பிடன் குறித்தோ, கமலா ஹாரிஸ் குறித்தோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து என்பதை மட்டும் ஒரே ஒரு இடத்தில் குறிப்பிட்டார்.

English summary
Trump speech, I am the president who will not wage war on any country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X