வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீர் விவகாரத்தில் யூடர்ன் அடித்த டிரம்ப்.. 'அந்த விஷயத்தை' இந்தியா ஏற்கவில்லை என ஒப்புதல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யூடர்ன் அடித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா ஏற்கவில்லை என்பதை டிரம்ப் ஒப்புக்கொண்டதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக காஷ்மீர் விவகாரத்தில் பிரச்சனை நிலவுகிறது. இந்த பிரச்சனையில் தலையிட்டு இருநாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என பலமுறை அமெரிக்கா முன்வந்தது. ஆனால் இதுவரை இந்தியா ஏற்றுக்கொண்டதில்லை.

Trump u-turn Kashmir issue, India not accepted the offer of mediation

இந்நிலையில் கடந்த ஜூலை 22ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப்- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா சமரசம் செய்ய முன்வருவதை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

2 மணி நேரம் லேட்.. இந்தியில் பேசிய மோடி.. மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் இதெல்லாம் கவனிச்சீங்களா? 2 மணி நேரம் லேட்.. இந்தியில் பேசிய மோடி.. மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

டிரம்பின் இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்திய அரசு, பிரதமர் மோடி எந்த இடத்திலும் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவின் சமரசத்தை ஏற்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தது. மேலும் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் மட்டுமே பேசி தீர்ப்போம் என்றும் வேறு எந்த நாடும் இதில் தலையிடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த செய்தி சேனலுக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா அளித்த பேட்டியில். "ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில மத்தியஸ்தம் செய்வது என்பது தனது ஆபரை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக்கொள்வதை பொறுத்தது என்பதில் அதிபர் டிரம்ப் தெளிவாக உள்ளார். இதேபோல் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்பதையும், எந்த இடத்திலும் சமரசத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் டிரம்ப் தெளிவுப்படுத்தி உள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா பழைய கொள்கையின் இந்தியா பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்வது இல்லை. ஆனால் அதேநேரம் இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பது என்ற விவகாரத்தில் அமெரிக்கா தெளிவாக இருப்பதாகவும் இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்களா " கூறினார்.

English summary
us president Trump u-turn kashmir issue, India not accepted the offer of mediation, not on the table anymore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X