வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு... ஜோ பிடன் பரபரப்புக் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருப்பதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் பரபரப்புக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பிறநாடுகள் மூக்கை நுழைக்க முயன்றால் அவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

America presidential candidates Trump vs Joe biden Debate

நாஷிவில்லில் டிரம்புடன் நடத்திய நேரடி விவாதத்தில் ஜோ பிடன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே டிரம்ப் - ஜோபிடன் இடையே நடைபெற்ற நேரடி விவாதத்தின் விவரம் பின்வருமாறு;

  • டிரம்ப் - தாம் சொன்ன காலத்திற்குள் கொரோனா தடுப்பூசி கண்டறியப்படும்
  • டிரம்ப் - அரசின் தடுப்பு நடவடிக்கை மூலம் கொரோனா உயிரிழப்புகள் தடுப்பு
  • டிரம்ப் - ஜோ பிடனை போல் என்னால் ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க முடியாது
  • டிரம்ப் - கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ சீனா தான் காரணம்
  • ஜோபிடன் - கொரோனாவை கட்டுப்படுத்த முறையாக செயல்திட்டம் வகுக்கவில்லை டிரம்ப்
  • ஜோ பிடன் - கொரோனாவின் தீவிரத்தன்மை குறித்து ஜனவரி மாதமே டிரம்புக்கு தெரியும்
  • ஜோ பிடன் - நீங்கள் மட்டும் ஏன் மாஸ்க் அணிவதில்லை என டிரம்பிடம் கேள்வி
  • ஜோ பிடன் - அமெரிக்க தேர்தலில் பிறநாடுகள் மூக்கை நுழைத்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்
  • ஜோ பிடன் - ரஷியாவை பற்றி டிரம்ப் ஏன் வாய் திறக்க மறுத்து வருகிறார்
  • ஜோ பிடன் -அமெரிக்க அதிபர் தேர்தல் ரஷியாவின் தலையீடு இருப்பது புரிகிறது
  • டிரம்ப் - உங்கள் குடும்பத்தினரை போன்று நான் என்ன ரஷியாவில் இருந்து நிதி பெற்றேனா?
  • டிரம்ப் - ரஷியாவில் இருந்து உங்கள் குடும்பத்தினர் பெற்ற பணம் குறித்து விளக்க வேண்டும்
  • ஜோ பிடன் - ஒரு பைசா கூட நான் ரஷியாவில் இருந்து பெறவில்லை என டிரம்புக்கு பதில்
  • ஜோ பிடன் - சீனா வங்கியில் கணக்குவைத்துக் கொண்டு சீனாவிடம் பணம் பெற்றிருக்கிறார் டிரம்ப்
English summary
America presidential candidates Trump vs Joe biden Debate
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X