வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தினால்.. மோசமான விளைவுகளை சந்திப்பீர்.. ஈரானுக்கு டிரம்ப் வார்னிங்

Google Oneindia Tamil News

Recommended Video

    Trump warns Iran | ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை

    வாஷிங்டன்: சுலைமானி மீதான தாக்குதலை மனதில் வைத்துக் கொண்டு அமெரிக்கர்கள் மீதோ அமெரிக்காவின் சொத்துகள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் 52 இடங்களில் குறிவைத்து தாக்கதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தில் கடந்த 3-ஆம் தேதி நடந்த தாக்குதலில் புரட்சி படையை சேர்ந்த சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பழிக்கு பழி வாங்குவோம் என ஈராக் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இதுகுறித்து டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறுகையில், சுலைமானி கொலைக்கு பதிலடியாக ஈரான் நாட்டில் அமெரிக்காவுக்கு சொந்தமான இடங்கள் மீது தாக்குதல் நடத்த போவதாக ஈரான் மிகவும் தைரியமாக பேசி வருகிறது.

    அமெரிக்கா உள்பட இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களிலும் சுலைமானிக்கு பங்குண்டு.. டிரம்ப் குண்டு அமெரிக்கா உள்பட இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களிலும் சுலைமானிக்கு பங்குண்டு.. டிரம்ப் குண்டு

    ஈரான்

    ஈரான்

    தீவிரவாத தாக்குதல் மூலம் அமெரிக்கர் ஒருவர் கொலை செய்து, ஏராளமானோர் படுகாயம் அடைய காரணமாக இருந்த பயங்கரவாத தலைவரை கொன்றதற்கு பழி வாங்குவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    தாக்குதல்

    தாக்குதல்

    அவர் தன் வாழ்நாளில் இதுவரை கொன்ற அப்பாவி மக்கள் குறித்து ஈரான் கவலைப்படவே இல்லை. சுலைமானி கொலையை கண்டித்து ஏராளமான போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் சுலைமானியோ பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்பட பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினார்.

    52 இடங்கள்

    52 இடங்கள்

    இது குறித்தெல்லாம் ஈரானுக்கு கவலையில்லை. அது போகட்டும், அமெரிக்கர்கள் மீதோ, அமெரிக்காவுக்கு சொந்தமான இடங்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால் எங்களது எதிர்வினை மிகவும் மோசமானதாக இருக்கும். நாங்கள் ஈரான் நாட்டில் உள்ள 52 இடங்களை குறி வைத்துள்ளோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    52 ஏன்?

    மேலும் 52 இடங்கள் என்ன கணக்கு என்பதையும் டிரம்ப் விளக்கியுள்ளார். அவர் கூறுகையில் கடந்த 1979-ஆம் ஆண்டு 52 அமெரிக்கர்களை பிணைக் கைதிகளாக ஈரான் நாட்டில் ஓராண்டுக்கு மேல் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நடந்தது. இதை குறிக்கும் விதமாக டிரம்ப் 52 இடங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    US President Donald Trump warns Iran that If it attacks any Americans or american sites then US will hit 52 iranian sites.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X