வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடடடடா.. ஒரு இடத்தில் நிற்காமல்.. கையை அசைத்து.. டிரம்ப் என்ன செஞ்சாலும் தப்பு தப்பா போகுதே.. ஏன்!

அடுத்த சர்ச்சையில் டிரம்ப் சிக்கி உள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Impeachment motion against Trump| இம்பீச்மெண்ட் நடவடிக்கை என்ன ? டிரம்ப் பதவி தப்புமா ?

    வாஷிங்டன்: தேசிய கீதத்தின்போது ஒரு இடத்தில் நிற்காமல், தன்னுடைய கைகளை ஆட்டிக்கொண்டும், உட்காரும் சேரை இழுத்து பிடித்து நின்றும் கொண்டிருந்தார் அதிபர் டிரம்ப்.. இதுதான் சர்ச்சையாக வெடித்துள்ளது.

    டிரம்ப் என்ன செய்தாலும் அது ஏடாகூடம்தான். வாயை திறந்தாலும் அது பஞ்சாயத்துதான்... வாயை திறக்காமல் கை, காலை ஆட்டினாலும் சர்ச்சைதான்.

    அதிபரின் நடவடிக்கை, அதிபரின் பேச்சு, அதிபரின் செயல் பலருக்கு பல சமயங்களில் அதிருப்தியை தந்துள்ளது... அதனால் டிரம்ப் எது செய்தாலும் பேசினாலும் அவரை எதிர்மறை கருத்துக்களை போட்டு நெட்டிசன்கள் வறுத்தெடுத்து விடுவார்கள்.

    trump waving his hand during national anthem

    இதெல்லாம் தெரிந்தும்கூட எதையாவது வித்தியாசமாக செய்கிறேன் என சொல்லி.. அவராகவே போய் வலையில் சிக்கி கொள்வார்.. அப்படி ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவில் 'சூப்பர் பவுல் 2020' என்ற நிகழ்ச்சி நடந்தது.. இதில் டிரம்ப் கலந்து கொண்டார்.. இந்நிகழ்ச்சி துவங்கும்போது, அமெரிக்க நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    ஏராளமான இசைக்கலைஞர்கள் அங்கு அந்த தேசிய கீதத்தை வாசித்தனர். அப்போது, அதற்கான இசையை கம்போஸ் செய்தவர், தன்னுடைய கையை அசைத்து குழுவினருக்கு ஆர்கனைஸ் செய்து கொண்டிருந்தார். இதனை சும்மா நின்று வேடிக்கை பார்க்காமல், டிரம்ப் திடீரென அந்த ஆர்கனைஸ் செய்பவரை போலவே தன்னுடைய கைகளை அசைத்தார்.. கைகளால் அசைத்து அசைத்து அவரைபோலவே பாவனை செய்தார்.

    பிறகு தன்னுடைய சேரை இழுத்து பிடித்து கொண்டும் நின்று கொண்டிருந்தார்... நிகழ்ச்சி லைவ் ஆக ஓடிக் கொண்டிருந்தது.. இந்த சம்பவமும் ரிக்கார்ட் ஆகி.. வீடியோ வைரலாகி.. கடைசியில் சர்ச்சையும் ஆகி வருகிறது. இத்தனைக்கும் மெலனியா டிரம்ப் உட்பட எல்லோருமே அந்த தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை அளித்து அங்குதான் நின்று கொண்டிருந்தனர்.

    அதிபர் மட்டும் நேராக நிற்காமல் கையை அசைத்துக்கொண்டும், தனது நாற்காலியை இழுத்துக்கொண்டும் நின்றுள்ளார். இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவின் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    English summary
    trump waving his hand during national anthem and this video becomes viral on socials now
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X