வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வன்முறையை புனிதப்படுத்துறீங்க ட்ரம்ப்.. அமெரிக்க அதிபர் என்றும் பாராமல்.. எச்சரித்த ட்விட்டர்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வன்முறையை புனிதப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் டுவிட் பதிவிற்கு ட்விட்டர் நிறுவனம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதுவரை அமெரிக்க அதிபர் ஒருவருக்கு இவ்வாறு ட்விட்டர் அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்தது கிடையாது. இதுதான் முதல் முறை.

கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதற்கு எதிராக போராட்டம் நடத்துவோர் மீது துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்ட பதிவுக்கு இவ்வாறு ஒரு பதிலடி கொடுத்துள்ளது ட்விட்டர் நிர்வாகம்.

Twitter adds unprecedented warning to Trump tweet threatening to shoot Minneapolis protesters

இதுபற்றி டிவிட்டர் வெளியிட்டுள்ள மெசேஜில், இந்த ட்விட்டர் பதிவு, ட்விட்டரின் நெறிமுறைகளை மீறி வன்முறையை புனிதப்படுத்துவது போல இருக்கிறது.

பொது மக்கள் நலன் சார்ந்த ட்வீட் பதிவாக இது இருக்கும் என்று ஏற்றுக்கொண்டு, இந்த ட்வீட் தொடர்வதற்கு அனுமதி அளிக்கிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உண்மையை கூறும் குரல்களை சமூக வலைத்தளங்கள் சில அடக்கி வைக்கின்றன. இதனை சரி செய்யா விட்டால் அவற்றை முழுவதுமாக மூட நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.

"சீன பிரச்சினை பற்றி பேச போன் போட்டேன், மோடி நல்ல மூடில் இல்லை.." ட்ரம்ப் அதிரடி பேட்டி.. என்னாச்சு?

Recommended Video

    மோடி நல்ல மூடில் இல்லை... டிரம்ப் அதிரடி பேட்டி

    தேர்தல் குறித்த "மெயில் இன் பேலட்" பற்றி டொனால்டு டிரம்ப் வெளியிட்ட வரிசையான டிவீட்டுகள் குறித்து ஏற்கனவே டுவிட்டர் நிறுவனம் ஆட்சேபம் தெரிவித்திருந்தது. 2வது முறையாக இப்போது மீண்டும் ஒரு மோதல் உருவாகியுள்ளது. டுவிட்டர் அக்கவுண்டை டெலிட் செய்யப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Twitter has added an unprecedented warning to a Trump tweet, warning users that the post glorifies violence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X