"தப்பா இருக்கு!" ட்விட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எலான் மஸ்க்.. இது தான் காரணம்
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க அறிவித்து இருந்த நிலையில், இந்த விவகாரத்தில் திடீரென பின்வாங்கும் வகையில் எலான் மஸ்க் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகின் நம்பர் டாப் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் நிறுவனத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். ட்விட்டர் நிறுவனத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று கூறி வந்தார்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், அவர் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2% பங்குகளை வாங்கினார். இதன் மூலம் அவர் ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ட்விட்டர் - எலான் மஸ்க் டீல்! ஆவேசமாகி பராக் அகர்வாலை சூழ்ந்து கொண்ட ஊழியர்கள்..என்ன தான் நடக்கிறது

எலான் மஸ்க்
இருப்பினும், போர்ட் உறுப்பினர் ஆக மறுத்த எலான் மஸ்க், சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார். முதலில் எலான் மஸ்கின் இந்த முயற்சியைத் தடுக்கவே ட்விட்டர் போர்ட் முயன்றது. இருப்பினும், பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எலான் மஸ்கின் ஆஃப்ருக்கு ட்விட்டர் போர்ட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துவிட்டனர்.

மாற்றம்
ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு ஷேரை சுமார் 54 டாலருக்கு எலான் மஸ்க் வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் ஓரிரு மாதங்களில் முழுமையாக முடியும் என்று கூறப்பட்டது. எலான் மஸ்க் கைகளில் ட்விட்டர் தளம் சென்றதும், அதில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டது. இப்போது இருக்கும் முக்கிய நிர்வாகிகள் மீது எலான் மஸ்க்கிற்கு நம்பிக்கை இல்லை என்றும் இதனால் அவர்கள் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

நிறுத்தி வைப்பு
இதனிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதே ட்விட்டர் தளத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் தளத்தில் இருக்கும் 5% கணக்குகள் போலியானவை என்பதால் ஒப்பந்தம் நிறுத்திவைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்தார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு ட்விட்டரில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன காரணம்
இது குறித்து அவர் தனது ட்வீட்டில், "ட்விட்டர் தளத்தில் இருக்கும் கணக்குகளில் சுமார் 5% போலி கணக்குகள் போலியானவை என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில், ட்விட்டர் டீல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு காரணமாக ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 20% சரிந்தன.

பங்குகள் சரிவு
இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை. இந்த மாத தொடக்கத்தில், ட்விட்டர் தளத்தில் உள்ள பயனர்களில் 5%க்கும் குறைவானவர்கள் போலிக் கணக்குகள் என்று அந்நிறுவனமே மதிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்கின் இந்த அறிவிப்பு காரணமாக பங்குச்சந்தையில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாகச் சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.