வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரம்ப் போட்ட இரண்டு டுவிட்டும் பொய்யானது.. முதல் முறையாக அடையாளப்படுத்திய டுவிட்டர்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: முதல் முறையாக, ட்விட்டர் நிறுவனம் அமெரிக்க அதிபர் வெளியிட்ட டொனால்ட் டிரம்பின் இரண்டு டுவிட்களை பொய்யான தகவல்கள் என்று அடையாளப்படுத்தியுள்ளது.

அஞ்சல் வாக்குகளை பற்றி இந்த இரண்டு டுவிட்களும் மக்கள் தவறாக வழிநடத்தும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டின உண்மை தன்மையை முதுல்முறையாக டுவிட்டர் சரிபார்த்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்கிழமை இரண்டு அடுத்தடுத்த டுவிட்களை வெளியிட்டிருந்தார். ட்விட்களில் டிரம்ப், மெயில்-இன் வாக்குச்சீட்டுகள் மோசடிக்கு வழிவகுக்கும் என்றும், அஞ்சல் பெட்டிகள் கொள்ளையடிக்கப்படும், வாக்குச்சீட்டுகள் போலியானவை மற்றும் சட்டவிரோதமாக அச்சிடப்பட்டு மோசடியாக கையொப்பமிடப்படும். கலிபோர்னியா ஆளுநர் மில்லியன் கணக்கான மக்களுக்கு வாக்குச்சீட்டை அனுப்புகிறார் என்று கூறியிருந்தார்.

உலகில் முதல் முறையாக புதிய உச்சம்.. கொரோனாவால் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் மரணம் உலகில் முதல் முறையாக புதிய உச்சம்.. கொரோனாவால் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் மரணம்

தவறாக வழிநடத்தும்

தவறாக வழிநடத்தும்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டஇரண்டு ட்விட்களும் பொய்யான தகவல் உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. மக்கனை டிரம்பின் டுவிட் தவறாக வழிநடத்தும் என்றும் கூறிய நிறுவனம் இரண்டு டுவிட்டையும் பொய் டுவிட் என்று அடையாளப்படுத்தியுள்ளது. மெயில்-இன் வாக்களிப்பு குறித்து தவறான அறிக்கைகள் "தவறாக வழிநடத்தும்" என்று கூறியுள்ளது.

அஞ்சல்-வாக்குகள்

அஞ்சல்-வாக்குகள்

ட்விட்டர் முதல் முறையாக அதிபர் டிரம்பை உண்மையாக சரிபார்த்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக அஞ்சல்-வாக்குகளை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் கலிபோர்னியா முக்கிய கவனம் செலுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசோம் குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவால் மெயில்-இன் வாக்களிப்பை விரிவுபடுத்துவதற்கான மாநில நடவடிக்கைகள் குறித்து வழக்குத் தொடர்ந்தார்.

தவறான தகவல்

தவறான தகவல்

இந்நிலையில் தான் டிரம்ப் கோபப்பட்டு டுவிட் பதிவினை வெளியிட்டிருந்தார். அவை தான் டுவிட்டரால் உண்மை சரிபார்க்கப்பட்டு பொய் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ட்விட்டர் செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, ட்வீட்டுகள் "வாக்களிக்கும் செயல்முறைகள் பற்றிய தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றன, மேலும் அஞ்சல்-வாக்குச் சீட்டுகளில் கூடுதல் சூழலை வழங்குவதற்காக அவை பெயரிடப்பட்டுள்ளன." என்றார்.

டுவிட்டர் மீது பாய்ந்தார்

டுவிட்டர் மீது பாய்ந்தார்

தனது டுவிட்டை பொய் என்று டுவிட்டர் கூறியதால் கடும் கோபம் அடைந்த டிரம்ப், டிவிட்டர் நிறுவனம் மீது பாய்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2020 அதிபர் தேர்தலில் ட்விட்டர் இப்போது தலையிடுகிறது. சி.என்.என் மற்றும் அமேசான் வாஷிங்டன் போஸ்ட் போன்றவை உண்மைச் சரிபார்ப்பின் அடிப்படை என்று கூறி, ஊழல் மற்றும் மோசடிக்கு வழிவகுக்கும் மெயில்-இன் வாக்குச்சீட்டில் எனது அறிக்கை தவறானது என்று சொல்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

Recommended Video

    ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் சாப்பிடுவதை நிறுத்திய டிரம்ப் | தடை விதித்த WHO

    English summary
    US President Donald Trump's tweets as ‘potentially misleading’ : First time labels by twitter
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X