வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கப்படும்.... அதிபர் ஜோ பைடனின் ட்விட்டர் பக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் @POTUS என்ற பெயரில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது, டிரம்ப் காலத்திலிருந்து ட்விட்டர் கணக்கு முற்றிலுமாக ரீசெட் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். அவருடன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் 49ஆவது துணை அதிபராகப் பதவியேற்றார்.

அதிபர் பதவியேற்றதும் பைடன் டிரம்ப் அரசு எடுத்த பல்வேறு முடிவுகளை ரத்து செய்தார். ஜோ பைடன் அரசின் முக்கிய அதிகாரிகள் வரும் நாட்களில் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் ட்விட்டர் கணக்கு

டிரம்ப் ட்விட்டர் கணக்கு

அமெரிக்க அதிபர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு @POTUS என்ற பக்கத்தில் செயல்படும். அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது அவர் பதிவிட்ட ட்வீட்டுகள் அனைத்தும், அவர் ஓய்வு பெறும்போது பாதுகாக்கப்பட்டன. டிரம்பிற்காகப் பிரதி எடுக்கப்பட்ட புதிய கணக்கில் பழைய ட்வீட்டுகள் இல்லையென்றாலும்கூட பழைய பக்கத்தைப் பின் தொடர்ந்தவர்கள், அப்படியே புதிய பக்கத்தையும் தொடருவது போல அமைக்கப்பட்டிருந்தது.

விதிகளில் மாற்றம்

விதிகளில் மாற்றம்

இந்த முறை அதிபர் ஜோ பைடனுக்கும் புதிதாக @POTUS என்ற ட்விட்டர் பக்கம் என்று தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும், டிரம்பின் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் யாரும் பைடனின் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் போல அமைக்கப்படவில்லை. புதிய அதிபரின் ட்விட்டர் பக்கம் குறித்துப் பின்தொடர்பவர்களுக்கு நோடிபிகேஷன் அனுப்பப்படும் என்றும் டிரம்ப் பக்கத்தைப் பின்தொடர்பவர்கள் விருப்பப்பட்டால் புதிய அதிபரின் பக்கத்தை பாலோ செய்யலாம். அவர்களுக்கு இந்த ஆப்ஷனை வழங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிசெட் செய்யப்பட்ட கணக்குகள்

ரிசெட் செய்யப்பட்ட கணக்குகள்

அதன்படி அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு @POTUS, துணை அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு @VP, வெள்ளை மாளிகையின் @WhiteHouse உள்ளிட்ட சில கணக்குகள் ரீசெட் செய்யப்பட்டுள்ளனர். அதிபர், துணை அதிபர் மற்றும் வெள்ளை மாளிகையைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதேபோல ரீசெட் செய்யப்பட்டுள்ள மற்ற கணக்குகளான @FLOTUS, @PressSec, @Cabinet ஆகியவற்றின் பலோயர்கஸ்களும் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன ஆனது டிரம்பின் ட்விட்டர்

என்ன ஆனது டிரம்பின் ட்விட்டர்

முன்னாள் அதிபர் டிரம்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு @POTUS45 என்று மாற்றப்பட்டுள்ளது. அவர் பதிவிட்ட ட்வீட்கள் எல்லாம் அப்படியே இருக்கும் என்றாலும் அந்த கணக்கிலிருந்து புதிய ட்வீட்களை யாராலும் பதிவிட முடியாது. இந்த ட்விட்டர் கணக்கை தற்போது 3.33 கோடி பேர் பின்தொடர்கின்றனர். டிரம்ப் அதிபராக இருக்கும் காலத்திலேயே கூட அவர் தனது @realDonaldTrump பக்கத்தையே அதிகம் பயன்படுத்திவந்தார். அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை காரணமாக அந்தப் பக்கத்தையும் ட்விட்டர் தற்போது நிரந்தரமாக முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Twitter cleared out all followers from the @POTUS and @WhiteHouse accounts after US President Biden was sworn in on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X