வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீரில் இதுக்கு உடனே முடிவுகட்டுங்க.. அமெரிக்க எம்பிக்கள் வெளியுறவு அமைச்சருக்கு பரபர கடிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    போருக்கான விதைகளை தூவுகிறது இந்தியா : பாகிஸ்தான் குற்றச்சாட்டு- வீடியோ

    வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீரில் தகவல் தொடர்பு முடக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் இதற்கு இந்திய அரசுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது.

    அன்று முதல் தற்போது வரை காஷ்மீர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

    உ.பி. சிறையில் வாடும் 300 காஷ்மீர் கைதிகள்.. கண்ணீருடன் அலை மோதும் குடும்பத்தினர்!உ.பி. சிறையில் வாடும் 300 காஷ்மீர் கைதிகள்.. கண்ணீருடன் அலை மோதும் குடும்பத்தினர்!

    பாம்பியோவுக்கு கடிதம்

    பாம்பியோவுக்கு கடிதம்

    இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு எம்பிக்கள் பரிமளா ஜெயபால் (இந்திய வம்சாவளி) மற்றும் ஜேம்ஸ் பி மெக்கோவன் ஆகியோர் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து கவலை தெரிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவிற்கு கடிதம் எழுதி உள்ளனர்.

    தடுப்பு காவல்

    தடுப்பு காவல்

    அவர்கள் எழுதி உள்ள கடிதத்தில் "ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உடனடியாக தகவல் தொடர்பு முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை வேண்டும். இதேபோல் அங்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுக்க நடவடிக்கை வேண்டும். காஷ்மீரில் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் காஷ்மீர் மக்களின் சட்டசபை மற்றும் வழிபாட்டு உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும்.

    நம்பகமான அறிக்கைகள்

    காஷ்மீரில் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் குறித்து மிகவும் கவலைப்படுகிறோம். குறிப்பாக இந்திய அரசு ஆயிரக்கணக்கான மக்களை எந்த வித உதவியும் இல்லாமல் தடுத்து வைத்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. ஊரடங்கு உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, காஷ்மீரில் இணையம் மற்றும் தொலைப்பேசி தொடர்பை துண்டித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். இது தொடர்பான ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் நம்பகமான அறிக்கைகளால் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம்.

    மனித உரிமை பார்வையாளர்கள்

    மனித உரிமை பார்வையாளர்கள்

    எனவே அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பான இந்த தகவல்களை விசாரிக்க சர்வதேச ஊடகங்கள் மற்றும் சுயாதீன மனித உரிமை பார்வையாளர்களை உடனடியாக ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதிக்க வேண்டும். இதற்கு இந்திய அரசுக்கு அமெரிக்க அரசு உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளனர்.

    English summary
    two US lawmakers said immediate end of communication blackout in Kashmir. the international media and independent human rights observers must immediately be allowed into Jammu and Kashmir .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X