வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் மோசமான நிலைமை.. 40 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 6 வாரங்களில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை அப்படியே இரு மடங்கு ஆகி உள்ளது. அதாவது சுமார் 20லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 15,640,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 9,528,714 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.29 லட்சமாக உயர்ந்துள்ளது.

U.S. hits 4 million reported coronavirus cases as infections double in just six weeks

உலகிலேயே கொரோனா தொற்றால் அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உலகிலேயே அதிக அளவு மரணமும் அமெரிக்காவில் தான் நிகழ்ந்துள்ளது. அங்கு கொரோனா தொற்றால் இதுவரை 141,000 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 66,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் அமெரிக்காவில் ஒரே நாளில் 1000த்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் மரணம் அடைந்தனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் கடுமையான பாதிப்பு காணப்படுகிறது. பிரேசிலில் கொரோனா தொற்றால் இறப்பு எண்ணிக்கை 84,082 ஆக உயர்ந்துள்ளது
அங்கு கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1311 பேர் மரணம் அடைந்தனர். இதனால் கொரோனா தொற்றால் நேற்று வரை 82,771 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 2,287,475 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 227,514ல் இருந்து 2,287,475 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    அமெரிக்காவின் Houston- ல் சீன தூதரகம் அதிரடியாக மூடல்

    அமெரிக்கா பிரேசிலை அடுத்து இந்தியாவில் பாதிப்பு கடுமையாக உள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 48,446 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,88,130 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33,326 பேர் குணம் அடைந்ததால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8,17,593 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஒரே நாளில் 755 பேர் மரணம் அடைந்தனர். இதனால் இதுவரை கொரோனாவால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,645 ஆக உயர்ந்துள்ளது.

    English summary
    The United States has reached a grim milestone of 4 million coronavirus cases, doubling the total number of infections in just six weeks as deaths
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X