வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்டவிரோத குடியேற்றம்.. டிரம்பின் அதிரடி சட்டம்.. யுஎஸ் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: யு.எஸ். பிரதிநிதிகள் சபையின் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை கணக்கிடுவதற்கான மக்கள் தொகையில் இருந்து சட்டவிரோத குடியேறியவர்களை நீக்குவதற்காக அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.

அமெரிக்காவில் வாழும் பல்வேறு புலம்பெயர்ந்தோர் உரிமைகள் குழுவினர் இந்த வழக்கை போட்டுள்ளனர். டிரம்பின் நடவடிக்கையால் பல மில்லியன் மக்களை கணக்கிடமுடியாது என்றும் கலிபோர்னியா, டெக்சாஸ் மற்றும் நியூ ஜெர்சி ஆகியவை ஹவுஸ் இடங்களை இழக்க நேரிடும் என்றும் பல ஆண்டு கணக்கெடுப்பில் மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை உள்ளது என்றும் அந்த குழுக்கள் தெரிவித்துள்ளன.

 U.S. Supreme Court Weighs Trump Bid To Bar Illegal Immigrants From Census Totals

டிரம்பால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் உட்பட 6-3 பழம்பெரும் நீதிபதிகள் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்ற அமர்வு, வீடியோ கான்பிரன்சிங் மூலம் 80 நிமிடம் வாதங்களை கேட்க முடிவு செய்துள்ளது.

ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற் உள்ளார். இந்த சூழலில் டிரம்பின் நிர்வாகம் விரைவாக முடிவடை உள்ளதால் பல கொள்கை மாற்றம் வரப்போவதால், இந்த வழக்கு கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்புஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு

அமெரிக்காவின் அரசியலமைப்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டாயமாகும். சட்டவிரோதமாக குடியேறியவர்களை மக்கள் எண்ணிக்கையில் இருந்து நீக்க முயற்சிப்பதை புலம் பெயர்ந்தவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். காரணம், ஹவுஸ் இடங்களை பகிர்வது "ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு கூறுவதுதான். ஆனால் டிரம்ப் கொண்டு வந்த சட்டம் என்பது கூட்டாட்சி தத்துவத்தை மீறும் வகையில் உள்ளதாகவும் வழக்கு தொடர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
The Supreme Court on Monday is set to take up President Donald Trump’s unprecedented and contentious effort to exclude illegal immigrants from the population totals used to allocate U.S. House of Representatives districts to states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X