வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மேல பாருங்க.. செக்க சிவப்பாக.. பறக்கும் தட்டில் ஏலியன்களா.. பரபரத்த அமெரிக்கா.. மேட்டர் வேற!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்கா முழுக்கவே கடந்த சில நாட்கள் பெரும் பரபரப்பு நாட்களாகிவிட்டன. காரணம், யூஎப்ஒ என்று சொல்லப்படும், பறக்கும் தட்டு.

வானத்தில் தோன்றிய இந்த அரிய நிகழ்வை பார்த்தவர்கள் போட்டோ எடுத்து அதை வெளியிட.. சோஷியல் மீடியா முழுக்க அது வைரலாகிவிட்டது.

யூஎப்ஒ குறித்த பேச்சுக்கள் அமெரிக்கா முழுவதும் பொதுவானவைதான். ஹாலிவுட் இயக்குநர்கள், கலர் கலராக பறக்கும் தட்டை வைத்து படம் எடுத்து வெளியிட்டு கல்லாகட்டிவிட்டனர். ஆனால், இதுதொடர்பான மர்மங்கள் இன்னும் விலகவில்லை.

போட்டோ

போட்டோ

இந்த நிலையில்தான், சமீபத்தில் கலிபோர்னியா பகுதியில் வானத்தில் ஒரு பறக்கும் தட்டு போன்ற காட்சியை அங்குள்ள மக்கள் பார்த்துள்ளனர். இதை பார்த்தால், ஒரு ஆப்பத்தை போல காணப்பட்டது. இதை ஒரு சிலர் போட்டோ எடுத்து, இதோ யூஎப்ஒ எங்கள் ஊரில் சுற்றுகிறது, உள்ளுக்குள், ஏலியன்கள் இருக்க கூடும் என கூற, அந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.

மேகக் கூட்டம்

மேகக் கூட்டம்

ஆனால், ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆய்வு செய்து, அது யூஎப்ஒ இல்லை என்று கூறியுள்ளனர். மேட்டர் என்னவென்றால், இது ஒருவகையான மேகத் திரள். இந்த குறிப்பிட்ட வகை மேகத்தை "லெண்டிகுலர் மேகம்" அல்லது "லென்னி" என்று அழைப்பார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதவிதமான காற்று இணையும்போது, குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் லென்னிகள் உருவாகின்றன.

எரிமலை

வடக்கு கலிபோர்னியாவின் மலைப்பாங்கான நிலப்பரப்பில் அமைந்துள்ள பிராந்தியத்தில், இதுபோன்ற மேகங்கள் மிகவும் பொதுவானவை, அருகிலுள்ள எரிமலை ஒன்றில் இருந்து வெளியாகும் துகள் காற்றுடன் கலந்து இப்படி ஒரு தோற்றத்தை உருவாக்குமாம்.

இதேபோன்ற மேகங்கள் கலிபோர்னியாவில் அவ்வப்போது தென்படும். 2017 ஆம் ஆண்டில், தெற்கு கலிபோர்னியாவின் கஜோன் பாஸில் பகுதியில், லென்னிகள் காணப்பட்டன.

கலர்

கலர்

இருப்பினும், இதுபோன்ற மேகங்கள் பெரும்பாலும் வெள்ளை மேக வடிவங்களை கொண்டிருக்கும். ஆனால் இப்போது காணப்பட்ட லென்னி, அடர் சிவப்பு நிறத்தில் எரியும் தீ போல இருந்தது, வானத்தில் நெருப்பு பந்து போல் இருந்தது. இதுதான், பறக்கும் தட்டு தொடர்பாக பேச்சு எழ காரணமாகிவிட்டது. வெள்ளையாகவே இருந்திருந்தால் யாரும் கண்டுக்காமல் போயிருப்பார்கள். அது கலர்ஃபுல்லாக மாறியதுதான், கன்ஃப்யூசனுக்கு காரணமாகிவிட்டது.

English summary
Saucer-like cloud lights up skies in Weed, California, many says it is Alien invasion or UFO.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X