வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை... ஐநா கவலை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, டிரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி நாடாளுமன்ற கட்டடத்தில் நுழைந்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

UN Chief Express Concern Over Violence In Washington

Recommended Video

    நாடாளுமன்ற கட்டிடம்.. டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகை.. துப்பாக்கிச்சூடு.. ஒருவர் பலி..!

    இதைத்தொடர்ந்து வாஷிங்டனில் பொது அவசரநிலையை 15 நாட்களுக்கு அமல்படுத்துவதாக வாஷிங்டன் மேயர் முரியல் பவுஸர் அறிவித்தார். புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற மறுநாள் வரை அவசரநிலை இருக்கும்.

    இந்த வன்முறை தொடர்பாக உலக தலைவர்கள் பலரும் தங்கள் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்கா நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய சூழ்நிலைகளில், வன்முறையிலிருந்து விலக வேண்டியதன் அவசியத்தையும், ஜனநாயக வழிமுறைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை அரசியல் தலைவர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்குக் கட்டாயம் எடுத்துக்கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ஒரே ஒரு பெண் பாம்புதான்.. அதோட குஜாலா இருக்க இரு ஆண் பாம்புகள் போட்டா போட்டி- வைரல் வீடியோஒரே ஒரு பெண் பாம்புதான்.. அதோட குஜாலா இருக்க இரு ஆண் பாம்புகள் போட்டா போட்டி- வைரல் வீடியோ

    ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் தனது ட்விட்டரில், "வாஷிங்டன் தாக்குதல் எனக்குக் கவலையளிப்பதாக உள்ளது. உலகின் முக்கிய ஜனநாயக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்த முக்கியமான நேரத்தில் நமது நாட்டில் அமைதி மற்றும் ஜனநாயகம் மேலோங்கும் என்று நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    English summary
    Top United Nations leadership expressed sadness and concern over the violence in Washington DC by pro-Trump demonstrators who stormed the US Capitol as lawmakers gathered to certify the presidential election results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X