வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவின் பேயாட்டம்.. கொத்துக்கொத்தாக மரணம், உலகிலேயே அதிக உயிரிழப்பை சந்தித்தாக நாடானது அமெரிக்கா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் 1830 பேர் உயிரிழந்தனர்.

Recommended Video

    ஊரடங்கை முன்கூட்டியே நீக்கினால் பெரிய இழப்பு ஏற்படும் - WHO எச்சரிக்கை

    இதன் மூலம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது.

    மேலும் உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவில் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 532,879 ஆக உயர்ந்துள்ளது.

    உலகம் முழுவதும் கொரோனாவால் 108,770 பேர் உயிரிழப்பு, பாதிப்பு 1,779,099 ஆக உயர்வு உலகம் முழுவதும் கொரோனாவால் 108,770 பேர் உயிரிழப்பு, பாதிப்பு 1,779,099 ஆக உயர்வு

    உலகில் பாதிப்பு

    உலகில் பாதிப்பு

    கொரோனாவுக்கு உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் பலியோனார் எண்ணிக்கை 6083 ஆக குறைந்தது. முன்னதாக நேற்று முன்தினம் (சனிக்கிழமை) கொரோனாவுக்கு 6973 பேர் உயிரிழந்திருந்தனர். கொரோனாவுக்கு நேற்று உலகம் முழுவதும் 108770 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 220க்கும் மேற்பட்ட நாடுகளில் 1779099 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 402709 பேர் குணடைந்தனர்

    உலகிலேயே அதிக பலி

    உலகிலேயே அதிக பலி

    உலகிலேயே கொரோனாவால் அதிகம் பேரை பலி கொடுத்த நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. இதுவரை இத்தாலி முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் அந்த நாட்டையும் முந்தி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 1830 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உலகின் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் அமெரிக்காவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 20577 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இத்தாலியில் இதுவரை 19606 ஆக உள்ளது.

     532879 பேருக்கு பாதிப்பு

    532879 பேருக்கு பாதிப்பு

    இது ஒருபுறம் எனில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ள அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 30003 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 532879 ஆக உயர்ந்தள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 30453 பேர் குணமடைந்துள்ளனர்.

    2670674 பேருக்கு பரிசோதனை

    2670674 பேருக்கு பரிசோதனை

    அமெரிக்காவிலேயே மிக அதிகபட்சமாக நியூயார்க் மாகாணத்தில் 181144 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 8627 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக நியூஜெர்சி மாகாணத்தில் 58151 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2183 பேர் உயிரிழந்துள்ளனர். மிசிகன் மாகாணத்தில் 23993 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1392 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா இதுவரை 2670674 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துள்ளது. அதில் 532,879 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    English summary
    United States Coronavirus: 532,879 Cases and 20,577, U.S. surpasses Italy for most confirmed coronavirus deaths with more than 20,000
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X