• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இணையும் வல்லரசுகள்? புதினுடன் இணங்கி போகும் பிடன்.. தனித்து விடப்படும் சீனா!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: குட்டி குட்டி நாடுகளுக்கு அவர்களால் திரும்ப செலுத்தவே முடியாத அளவிற்கு அதிகமாக கடன்கொடுத்து அந்த நாடுகளை தனது வலையில் வீழ்த்தி வருகிறது சீனா.. சீனாவின் ஆதிக்கத்தை விரும்பாத அமெரிக்கா, ரஷியாவுடன் கைகோர்க்க தயாராக உள்ளதாக தெரிகிறது ஏனெனில் ரஷ்யா உடன் திடீரென சுமூக உறவை நாட அந்நாட்டு அதிபர் பைடன் விரும்புவதே காரணம்

  Tiangong Space Station-ஐ வைத்து போடப்படும் திட்டம்.. 3 பேரை விண்ணிற்கு அனுப்பிய China

  நம்மூரில் கந்துவட்டிக்கார்கள், செய்யும் வேலையைத்தான் உலக வல்லரசு நாடுகள் சின்ன நாடுகளிடம் காட்டுகின்றன. ஒருவனுக்கு கடன் கொடுத்தால் திருப்பி தர மாட்டான் என்று தெரியும். ஆனால் அவனிடம் உள்ள சொத்தை பிடுங்கி கொள்வதற்காக அவனால் கட்ட முடியாத அளவிற்கு கடன் கொடுப்பார்கள்.

  ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்! ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்!

  அதாவது அவனது சொத்தை அடிமாட்டு விலைக்கு ஆட்டையை போடுவதற்காக சொத்துக்களை சட்டப்படி கிரயம் செய்துவிட்டு கடன் கொடுப்பார்கள். கடனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கொடுக்க முடியாத நிலையில் அந்த ஏழை ஒரு கட்டத்தில் சொத்தை கந்துவட்டிக்கார்களிடம் பறிகொடுத்துவிட்டு வீட்டை விட்டு தெருவில் போய் நிற்கதியார் நிற்பார் அல்லது கந்துவட்டிக்காரர் சொல்வதை கேட்டு காலம் முழுவதும் செயல்படுவார்.

  வளர்ச்சி திட்டங்கள்

  வளர்ச்சி திட்டங்கள்

  இதேமுறையைத்தான் உலக நாடுகளும் செய்கின்றன. சீனா இந்த விஷயத்தை இப்போது அதிகம் செய்கிறது. தனது உற்பத்தியை பெருக்கவும், மற்ற நாடுகளை பல காலத்திற்கு தனது சந்தையாகவும் மாற்றுவதற்காக புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறது. அதன்படி ஒரு நாட்டிற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி கொடுப்பது .அதாவது ரயில் பாதை அமைப்பது, துறைமுகம் அமைப்பது, விமான நிலையம் அமைப்பது, சாலை அமைப்பது போனற்வற்றை சீனா செய்து கொடுக்கும். அதற்கு பிரதிபலனாக அதை பயன்படுத்த மக்களிடம் பணம் வசூலித்துக்கொள்ளும். நம்மூரில் ரோடு போட்டுவிட்டு சுங்க கட்டணம் வசூலிக்கிறாரே அதேதான்.. அதே பாணியில் தான் சீனா உலகின் குட்டி நாடுகளை தன் வசப்படுத்தி வருகிறது. பணத்தை வாரி குவித்து வருகிறது.

  இலங்கை

  இலங்கை

  இதேபோல் குட்டி நாடுகளிடம் அவர்களால் திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு கடன் கொடுத்துவிட்டு காலமெல்லாம் தனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று மிரட்டுகிறது சீனா. சீனாவின் வலையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையும் விழுந்துவிட்டது. ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளையும் வளைத்துவிட்டது. கிட்டதட்ட அங்குள்ள அரசுகள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அளவிற்கு சீனா வளர்ந்துள்ளது.

  ரஷ்யா உடன் நட்பு

  ரஷ்யா உடன் நட்பு

  சீனாவின் செயலால் கொதித்து போய் இருக்கும் அமெரிக்கா, தனது பங்காளியான ரஷ்யாவுடன்( இவர்கள் இருவர் வைத்தது தான் உலகின் சட்டமாக ஒரு காலம் வரை இருந்தது), நட்புறவை புதுப்பிக்க விரும்புகிறது. பனிப்போரை மறந்து சீனாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட விரும்புகிறது.,

  புதின் பேச்சு

  புதின் பேச்சு

  ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அவரது அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோர் நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் சந்தித்து பேசினர் . சந்திப்பிற்கு பிறகு, புதின் தனது பத்திரிகையாளர் சந்திப்பில் பிடனுடனான சந்திப்பு "ஆக்கபூர்வமானது" என்றும், இரு நாடுகளும் தங்கள் தூதர்கள் மாஸ்கோ மற்றும் வாஷிங்டனில் உள்ள தூதரகங்களூக்கு திரும்புவதாக ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்தார். மூலோபாய ஸ்திரத்தன்மை, வர்த்தக உறவுகள், பிராந்திய பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு நாடுகளும் விவாதித்தன என்றும் புதின் கூறினார்.

  சீன ஆதிக்கம்

  சீன ஆதிக்கம்

  உக்ரைன், சிரியா, பெலாரஸ் மற்றும் மனித உரிமைகள் போன்ற பிரச்சினைகளில் அமெரிக்காவும் ரஷியாவும் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அமெரிக்க-ரஷ்யா உறவுகளை மீண்டும் தொடங்க பைடன் விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் இதற்கு ரஷ்ய அதிபர் புதின் எந்த அளவிற்கு ஒத்துப்போவார் என்பது தெரியவில்லை , சீன வணிக ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில், அதற்கு மாறாக ரஷியாவை ஆதரிக்க, அமெரிக்க அதன் நட்பு நாடுகளை தூண்டி விடுவதாக சொல்கிறார்கள் நிபுணர்கள்.

  English summary
  China is trapping small countries by lending them more than they can repay. The United States, which does not want Chinese domination, seems ready to join hands with Russia because President Biden wants to suddenly seek social ties with Russia.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X