வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் சாலைகளில் தஞ்சம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்ததால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று இரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் நகரின் அருகே மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.

United States Geological Survey: A M 7.1 Earthquake strikes Southern California

கலிபோர்னியாவில் நிலநடுக்கத்தால் சாலையில் ஏற்பட்ட விரிசல் ஏற்பட்டுள்ளது. இதே போல், சுதந்திர தினத்தை கொண்டாடும் தினத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் வடகிழக்கே 240 கிமீ தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் ரிட்ஜ்கெர்ஸ் எனும் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டது.

கலிபோர்னியாவில் உள்ள நவேடாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இதுபோன்ற நிலநடுக்கம் கடந்த 20 ஆண்டுகளில் கலிபோர்னியாவில் ஏற்படவில்லை என அமெரிக்கா புவியியல் துறை கூறியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ரிட்ஜ்கெர்ஸ் பகுதியில் உள்ள இரு வீடுகள் திடீரென தீப்பிடித்தன. மேலும் பல்வேறு கடைகள், நிறுவனங்கள், பெரிய கடைகளில் இருந்த வியாபாரப் பொருட்கள் என அனைத்தும் கீழே விழுந்தன.

வீடுகளுக்கு வழங்க நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள சமையல் எரிவாயு குழாய்களிலும் பயங்கரமான சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் தற்போது அரசு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டபோதே, அதைவிட பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

English summary
United States Geological Survey: A M7.1 Earthquake strikes Southern California. More details awaited
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X