வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

1999 க்குப் பிறகு மிகப்பெரிய நிலநடுக்கம்... கலிபோர்னியாவில் மீட்புப் பணிகள் தீவிரம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: தெற்கு கலிபோர்னியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.1 ரிக்டர் பதிவானதால் மக்கள் பீதி அடைந்தனர். 1999 க்குப் பிறகு தெற்கு கலிபோர்னியாவைத் தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும்

அந்நாட்டு நேரப்படி வியாழனன்று காலை 11 மணியளவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் 6 புள்ளி 4 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இந்த நிலையில் நேற்று இரவு 7.1 எனும் ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ட்ரோனா மற்றும் ரிட்ஜெக்ரெஸ்ட் நகரங்கள் குலுங்கின.

United States Geological Survey: The strongest quakes in Southern California

ஏற்கெனவே ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கேஸ் பைப் உடைந்து இரு வீடுகள் தீப்பற்றின. சில கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் கடந்த வியாழனன்று ஏற்பட்டதை விட அதிக ரிக்டரில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது தென் கலிஃபோர்னியா மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து, தெற்கு கலிபோர்னியா பூகம்ப தரவு மைய அதிகாரிகள் கூறுகையில், 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், மொஜாவே பாலைவனத்தை உலுக்கியது. தெற்கு கலிபோர்னியாவிலிருந்து அரிசோனா மற்றும் நெவாடா வரை நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர்.

1999 க்குப் பிறகு தெற்கு கலிபோர்னியாவைத் தாக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும். அக்டோபர் 16, 1999 அதிகாலையில் அந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, ஆனால், தொலைதூரத்தில் பூகம்பம் மையம் கொண்டிருந்ததால், மிகக் குறைவான சேதத்தை மட்டுமே ஏற்படுத்தியது என்று தெரிவித்தனர்.

1994 ஆம் ஆண்டில், லாஸ் ஏஞ்சல்ஸின் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில், 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 57 பேர் உயிரிழந்தனர். 7,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். வீடுகள், தொழிற்சாலைகள் இடிந்து உள்கட்டமைப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தெற்கு கலிபோர்னியாவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். நேற்றிரவு நிகழ்ந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால், ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த முழு நிலவரம் இன்னும் தெரியவில்லை. மீட்புபணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

English summary
7.1 Earthquake strikes Southern California; The strongest earthquake since 1999
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X