வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாகிஸ்தான் வான் எல்லையை பயன்படுத்த வேண்டாம்.. அமெரிக்க விமானங்களுக்கு தடாலடி உத்தரவு

Google Oneindia Tamil News

Recommended Video

    முற்றும் அமெரிக்கா ஈரான் மோதல்... மூன்றாம் உலக போர் வெடிக்குமா ?

    வாஷிங்டன்: தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் இருப்பதால், பாகிஸ்தான் வான்வெளியில் அமெரிக்க விமானங்கள் பறக்க வேண்டாம் என்று அந்த நாட்டு அரசாங்கம் தடாலடியாக ஒரு எச்சரிக்கையை பிறப்பித்து உள்ளது.

    அனைத்து அமெரிக்க அரசு விமானங்கள் மற்றும் வர்த்தக ரீதியான விமானங்கள் பாகிஸ்தான் எல்லையை தவிர்க்க வேண்டும் என்று அந்த எச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    United States warns its air carriers to avoid Pakistan airspace

    இவ்வாறு ஒரு எச்சரிக்கையை பிறப்பிப்பதற்கு என்ன காரணம் என்பதும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் அல்லது தீவிரவாத குழுக்கள் அமெரிக்க விமானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

     நீங்க ஏன் பாகிஸ்தானுக்கு எதிராக போராடவில்லை.. எதிர்க்கட்சிகளுக்கு மோடி தடாலடி கேள்வி நீங்க ஏன் பாகிஸ்தானுக்கு எதிராக போராடவில்லை.. எதிர்க்கட்சிகளுக்கு மோடி தடாலடி கேள்வி

    குறிப்பாக, குறைந்த உயரத்தில் பறக்கக் கூடிய விமானங்கள் இதுபோன்ற தாக்குதலுக்கு இலக்காக கூடும். தரையிறக்கம் மற்றும் ஏற்றம் போன்ற நேரங்களில் தாக்குதல் அபாயம் அதிகமாக உள்ளது. ஏனெனில் அப்போது விமானம் குறைந்த உயரத்தில் பறக்கும். விமானங்களை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் உள்ளிட்ட கருவிகளின் மூலமாக இந்தத் தாக்குதல் நடத்தக் கூடிய அபாயம் இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2020 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது பாகிஸ்தானில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற இந்திய வாதத்துக்கு வலு சேர்ப்பது போல இந்த உத்தரவு அமைந்துள்ளது.

    English summary
    United States warns its air carriers to avoid Pakistan airspace, it may be a risk & possible threat of attacks on #US airlines (commercial&US state carrier) by Pakistan extremist & militant groups.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X