• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கடுப்பேற்றும் அமெரிக்கா.. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எம்.பி. விசிட்.. கடும் கோபத்தில் இந்தியா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க எம்பி இல்ஹான் ஓமர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய உள்ள நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரில் பெரும்பாலான உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், இந்தியா இதில் நடுநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களிலும் கூட இந்தியா வாக்களிக்காமல் புறக்கணிக்கவே செய்தது.

இந்த விவகாரத்தில் வெளிப்படையாக இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இருப்பினும், அமெரிக்கா பிரதிநிதிகள் தொடர்ந்து மறைமுகமாக இந்தியாவைச் சாடியே வருகின்றனர்.

விமானம் மோத வருது.. வெளியே போங்க! அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு! தெறித்த எம்பிக்கள்.. என்னாச்சு விமானம் மோத வருது.. வெளியே போங்க! அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபரப்பு! தெறித்த எம்பிக்கள்.. என்னாச்சு

 அமெரிக்க எம்பி

அமெரிக்க எம்பி

குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் எரிபொருள் வாங்குவதாகத் தகவல் வெளியான பின்னர், அமெரிக்க பிரதிநிதிகள் தொடர்ந்து சாடி வந்தனர். அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றாலும் கூட, அந்நாட்டின் பிரதிநிதிகள் இந்தியா நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய நேரம் இது என்றே தொடர்ந்து கூறி வந்தனர். இதனிடையே கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமெரிக்கா எம்பி இல்ஹான் ஓமர், 4 நாள் பயணமாகப் பாகிஸ்தான் சென்றார்.

 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

அதிபர் பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்பி ஆன இல்ஹான் ஓமர், பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் இந்நாள் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சந்தித்தார். அதன் பின்னர் அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் சென்றார். அமெரிக்கா எம்பி ஒருவர் பாக், ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 இந்தியா கண்டனம்

இந்தியா கண்டனம்

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "அத்தகைய குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல்வாதி இதுபோன்ற அரசியலை அவர்களது சொந்த நாட்டில் செய்யலாம். அது அவரது பாணியாக இருக்கலாம். ஆனால், நமது பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது வகையில் வெளிநாட்டிற்கு வந்து இப்படிச் செயல்படுவது சரியான நடைமுறை இல்லை" என்று கடும் கண்டனத்தை இந்தியா தெரிவித்து இருந்தது.

 அமெரிக்கா விளக்கம்

அமெரிக்கா விளக்கம்

இந்நிலையில், இதற்கு அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் டெரெக் சோலெட், "இது ஒரு அதிகாரப்பூர்வமற்ற தனிப்பட்ட பயணம். இந்த பயணம் அமெரிக்க அரசின் எந்த கொள்கையையும் மாற்றாது" என்று தெரிவித்துள்ளார். இந்த பயணத்திற்கும் அமெரிக்காவுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்பதால் இது தொடர்பாகக் கூடுதல் எதையும் கூற முடியாது என்றும் டெரெக் சோலெட் தெரிவித்தார்.

 யார் இவர்

யார் இவர்

அமெரிக்காவில் மினசோட்டா பகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்ஹான் ஓமர். அவர் பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் மனித உரிமைகள் மற்றும் இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசை விமர்சிப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாகவும் பைடன் நிர்வாகத்தையும் இல்ஹான் ஓமர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

 இம்ரான் கான் சாடல்

இம்ரான் கான் சாடல்

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தனது ஆட்சியைக் கவிழ்ப்பதில் அமெரிக்காவின் சதி உள்ளதாக இம்ரான் கான் சாடி இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைத்த இம்ரான் கான், மக்கள் போராட்டத்திற்கும் அழைப்புவிடுத்தார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இரு நாடுகளுக்கும் இடையே மேம்படுத்தும் வகையில் இப்போது அமெரிக்க எம்பி இல்ஹான் ஓமர் பாக். சென்றுள்ளார்.

English summary
US explains about its lawmaker Ilhan Omar's POK visit: (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்ற அமெரிக்கா எம்பி) UP MP's four-day visit to Pakistan, also met former Prime Minister Imran Khan and his successor Shahbaz Sharif.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X