இந்தியாவுக்கு அடுத்த ஷாக்.. அமெரிக்கா போல் வரிபோடும் ஐரோப்பா நாடுகள்? டிரம்ப் கொடுக்கும் பிரஷர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி போட்டுள்ளார். உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்த வரிக்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் அதே விஷயத்தை காரணம் காட்டி இந்தியாவுக்கு கூடுதல் வரிகளை விதிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடவாடியாக வரிகளை விதித்து வருகிறார். இதில் நம் நாடும் தப்பவில்லை. நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரிகளை டிரம்ப் விதித்துள்ளார்.

அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறைக்கு 25 சதவீதம், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை போட்டுள்ளார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் நம் நாடு கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் அமெரிக்காவை போல் நம் நாட்டின் மீது வரி போடும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி வருகிறார்.
உக்னைர் மீதான ரஷ்யாவின் போரை ஐரேப்பிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதுமட்டுமின்றி ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் நிதி உதவிகள் செய்து வருகின்றன.
இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை எப்படி சுட்டிக்காட்டி அமெரிக்கா வரி போட்டதோ? அதேபோல் ஐரோப்பிய நாடுகளும் இந்தியா மீது வரி விதிக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் சார்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதை காரணம் காட்டி இந்தியா மீது 2ம் நிலை பொருளாதார தடைகளையும் விதிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை சார்பில் வலியுறத்தப்பட்டுள்ளது ஆனால் தற்போது வரை ஐரோப்பிய நாடுகள் இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications