வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆம்.. கொரோனா வைரஸ் காற்றில் பரவும்.. ஒ்ப்புக்கொண்டது அமெரிக்க நோய் கட்டுப்பாடு அமைப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா தொற்றுநோயை பரப்பி வரும் SARS-CoV-2 வைரஸ், ஒருவர் மூச்சுவிடும் போது, காற்றில் பரவி நீர் துகள்களாக மற்றொருவருக்கு பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) ஒப்புக் கொண்டுள்ளது.

Recommended Video

    கொரோனாவைரஸ் காற்றிலும் நீண்ட தூரம் பரவுகிறது.. WHO புதிய வழிகாட்டுதல்களின் முழு தகவல்

    சி.டி.சி தனது பொது வழிகாட்டுதல்களை வெள்ளிக்கிழமை திருத்தி அமைத்துள்ளது. SARS-CoV-2 தொற்று நீர் துகள்களை கொரோனா பாதித்தவர் வெளிப்படுத்துவதன் மூலம் பரவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. பேசும் போது, ​​மக்களின் எச்சில் காற்றில் பரவுகிறது. அந்த நீர் துளிகளி காற்றின் மேற்பரப்பில் மிதக்கின்றன. சில நேரங்களில் காற்றில் அப்படியே இடைப்பட்டு நிற்கலாம்.

    வீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம! வீடு தேடி வந்த உதயநிதி.. நெகிழ்ந்து போன விஜயகாந்த் குடும்பம்.. பதிலுக்கு ஸ்டாலினை சந்தித்து.. செம்ம!

    பெரிய நீர்த்துளிகள் சில நொடிகளில் இருந்து நிமிடங்களுக்குள் காற்றிலிருந்து வேகமாக கீழே விழுந்து விடும். அதே வேளையில், மிகச் சிறிய நீர்த்துளிகள் மற்றும் ஏரோசல் துகள்கள் சில நிமிடங்கள் முதல் சில மணி துளிகள் வரை காற்றில் இடைநிறுத்தப்படலாம்.

    சிடிசி தகவல்

    சிடிசி தகவல்

    கொரோனா பாதித்த ஒருவரிடம் இருந்து ஆறு அடி வரை உள்ள தூரத்தில் அவரது நீர் துளிகளை மற்றொருவர் சுவாசிக்கும் போது உள்இழுக்க வாய்ப்பு உள்ளது. அப்படி இழுக்கும் போது கொரோனா வைரஸ் அவரை பாதிக்கும். ( சில சந்தர்பங்களில் 15 நிமிடங்களுக்குள் இது சாத்தியம்) எனவே காற்றில் வைரஸ் , ஆறு அடி தூரத்தில் இருந்தாலும் மக்களை கொரோனா பாதிக்கும் என்று சி.டி.சி புதிய அறிவிப்பில் கூறியுள்ளது

    உலக நாடுகள்

    உலக நாடுகள்

    தி லான்செட் பத்திரிகையில் SARS-CoV-2 வைரஸ் காற்று வழியாக பரவுகிறது என்று வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு திருத்தப்பட்ட அமெரிக்க சி.டி.சி யின் வழிகாட்டுதல்கள் வெளிவந்துள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆறு நிபுணர்களின் பகுப்பாய்வு, வைரஸ் காற்றில் பரவுகிறது என்றே சொல்கின்றன.

    விஞ்ஞானிகள்

    விஞ்ஞானிகள்

    உலகளவில் கொரோனா வைரஸ் பரவியதில் இருந்தே, பல மருத்துவ விஞ்ஞானிகள் , தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும், கோவிட் -19 வான்வழியில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை அங்கீகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்

    நெரிசலான இடங்கள்

    நெரிசலான இடங்கள்

    ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த உலக சுகாதார அமைப்பு ஜூலை 2020 இல் ஒப்புக் கொண்டது, மிகவும் நெரிசலான இடங்களில் கொரோனா வைரஸ் காற்றில் எஞ்சியிருப்பதற்கு சாத்தியம், அங்கு "குறுகிய தூர ஏரோசல் பரவுதலை நிராகரிக்க முடியாது" என்று தெரிவித்தது.

    English summary
    The US Centers for Disease Control and Prevention (CDC) has acknowledged that the SARS-CoV-2 virus, behind the Covid-19 pandemic, is airborne and can be transmitted through very fine aerosolised particles released during respiration.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X