வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சந்தோஷம் தொடங்கிவிட்டது.. இலங்கை குண்டுவெடிப்பில் இறந்த அமெரிக்கர் பேஸ்புக்கில் போட்ட கடைசி பதிவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: சந்தோஷம் தொடங்கிவிட்டது.. இதுதான், அமெரிக்காவை சேர்ந்த டயேட்டர் கோவல்ஸ்கி, அவர் மரணிக்கும் முன்பு கடைசியாக வெளியிட்ட பேஸ்புக் ஸ்டேட்டஸ்.

பிரிட்டீஷ் கல்வி மற்றும் பப்ளிஷிங் கம்பெனியான பியர்சன் நிறுவனத்தில், பணியாற்றியவர், டயேட்டர் கோவல்ஸ்கி. இவர் கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்காவிலிருந்து கொழும்புக்கு, விமானத்தில் பயணித்துள்ளார். கொழும்பில் சில டெக்னிக்கல் விஷயங்களை சரி செய்ய ஒரு வாரகாலமாக அவர் தங்கியிருக்கச் சென்றார்.

US citizen died in Sri lanka

முன்னதாக தனது பேஸ்புக் பக்கத்தில், அவர் ஒரு ஸ்டேடஸ் வெளியிட்டுவிட்டு அமெரிக்காவிலிருந்து கிளம்பியிருந்தார். அதில், சந்தோஷம் தொடங்கிவிட்டது. இதுபோன்ற பணி ட்ரிப்புகளை விரும்புகிறேன். 24 மணி நேர விமான பயணம். விரைவில் உன்னை பார்க்கிறேன், ஸ்ரீலங்கா. இவ்வாறு டயேட்டர் கோவல்ஸ்கி தனது ஸ்டேடசில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கொழும்பில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் நடைபெற்ற குண்டு வெடிப்பில், டயேட்டர் கோவல்ஸ்கி பரிதாபமாக பலியானார். இதையடுத்து அவரது பேஸ்புக் பக்கத்தில், நண்பர்களும், உடன் பணியாற்றுவோரும், அனுதாபம் தெரிவித்து பதிவுகளை போட்டு வருகிறார்கள்.

இலங்கை தாக்குதல் எதிரொலி.. சிஎஸ்கே போட்டிக்கு பலத்த பாதுகாப்பு.. சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு இலங்கை தாக்குதல் எதிரொலி.. சிஎஸ்கே போட்டிக்கு பலத்த பாதுகாப்பு.. சேப்பாக்கத்தில் போலீஸ் குவிப்பு

English summary
Dieter Kowalski, who worked for British educational and publishing company Pearson, wrote a final Facebook posting as he flew out Friday from his base in Denver.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X