வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் இதுவரை இல்லாத துயரம் .. ஒரே நாளில் 1049 பேர் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 5102 !

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200,000லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5000த்தை தாண்டி உள்ளது, நியூயார்க்கில் மட்டும் 83000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில ஆளுநர் ஆண்ட்ரோ கௌமோ தெரிவித்துள்ளார்.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு அந்த நிலையில் தான் உலகமே இப்போது கொரோனா வைரஸ் விஷயத்தில் உள்ளன. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வழி தெரியாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து என உலகின் அத்தனை பணக்கார நாடுகளும் திணறி வருகின்றன.

இது வரை ஐரோப்பாவில் மட்டும் 30ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளில் பல நாடுகள் சீனாவை முந்திவிட்டன. உலகிலேயே அமெரிக்காவில் தான் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து மீண்டு வர வழிதெரியாமல் மருந்துகளை கண்டுபிடிக்க தீவிர முயற்சி செய்து வருகிறது அமெரிக்கா.

5 ஆயிரம் பேர் பலி

5 ஆயிரம் பேர் பலி

தற்போதைய நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 215,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 26400 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டதால் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2லட்சத்து 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் மார்ச் 31ம் தேதி ஒரே நாளில் 912 பேர் இறந்ததால் உயிரிழப்பு 4051 ஆக அதிகரித்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 1049 பேர் உயிரிழந்ததால், பலியானோர் எண்ணிக்கை அமெரிக்காவில் 5102 ஆக உயர்ந்துள்ளது.

பல ஆயிரம் பேர் பாதிப்பு

பல ஆயிரம் பேர் பாதிப்பு

நியூயார்க் மாகாணம் கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. அங்கு இதுவரை 83901 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக நியூஜெர்சி மாகாணத்தில் 22255 பேரும், கலிபோர்னியாவில் 9892 பேரும், மிச்சிகன் மாகாணத்தில் 9334 பேரும், ப்ளோரிடாவில் 7738 பேரும், மசாசூசெட்ஸ் மாகாணத்தில் 7738 பேரும், அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் மாகாணத்தில் 5894 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமூக விலகல் வேண்டும்

சமூக விலகல் வேண்டும்

ஏப்ரல் 2ம் தேதியான இன்று காலை மட்டும் அமெரிக்காவில் தற்போது வரை 297 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 8 பேர் புதிதாக இறந்துள்ளனர். அமெரிக்காவில் உச்சகட்ட கொடுமையாக 6 வாரக்குழந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தி உள்ளார்.

ஹாட்ஸ்பாட் அமெரிக்கா

ஹாட்ஸ்பாட் அமெரிக்கா

அமெரிக்காவில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகக்கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டும் எனில் சமூக விலகலை கடைபிடிப்பது, வீட்டிலேயே இருப்பது, கைகளை அடிக்கடி கழுவது, அரசின் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிப்பது, உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது போன்றவை இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். கொரோனா வைரஸின உலகத்தின் ஹாட் ஸ்பாட் ஆக பயங்கரமாக அமெரிக்கா மாறியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

English summary
US coronavirus cases surpass 215,300 with more than 5,110 deaths, New York worstly affected
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X