வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் கொரோனாவுக்கு 2 லட்சம் பேர் பலியாகக் கூடும்.. விஞ்ஞானி பகீர் தகவல்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவுக்கு 2 லட்சம் பேர் பலியாகக் கூடும் என அந்நாட்டு விஞ்ஞானி ஆன்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனாவின் கோர பிடியில் அமெரிக்கா

    அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.41 லட்சமாக உயர்ந்துள்ளது. அது போல் ஒரே நாளில் 517 பேர் பலியாகியுள்ளனர்.

    US Coronavirus deaths may reach 2 lakh, says Scientist

    இதனால் அமெரிக்காவில் மொத்த பலி எண்ணிக்கை 2,475 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை உயரக் கூடும் என்ற பகீர் தகவலை அந்நாட்டு ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்தின் விஞ்ஞானி ஆன்டனி பவுசி தெரிவித்துள்ளார்.

    அவர் கூறுகையில் அமெரிக்காவில் கொரோனாவால் 1 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவர். இதை நான் உறுதியாக சொல்லவில்லை. இதை ஏற்கெனவே அமெரிக்காவை பாதித்த காய்ச்சல்களுடன் ஒப்பிட்டே கூறியுள்ளேன். கடந்த 2010ஆம் ஆண்டு முதல் காய்ச்சல் காரணமாக 12 ஆயிரம் பேர் முதல் 61 ஆயிரம் பேர் வரை பலியாகிவிட்டனர். அது போல் அமெரிக்காவில் 1918-19-ஆம் ஆண்டு ஏற்பட்ட தொற்றுநோயால் 6,75,000 பேர் இறந்துள்ளனர்.

    காய்ச்சல் மாத்திரை உட்கொள்ளும் பயணிகள்.. தெர்மல் ஸ்கேனரில் தப்பும் கொரோனா அறிகுறியினர்- முதல்வர் காய்ச்சல் மாத்திரை உட்கொள்ளும் பயணிகள்.. தெர்மல் ஸ்கேனரில் தப்பும் கொரோனா அறிகுறியினர்- முதல்வர்

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருந்த சூழலை இப்போது ஒப்பிட்டு பார்த்தோமேயானால் நம் நாட்டின் நிலை என்ன என்பது மிகச் சரியாக தெரியவரும். முன்பை காட்டிலும் தற்போது கொரோனாவுக்கான சோதனைகள் அதிகபடியாக எடுக்கப்படுகிறது.

    அமெரிக்காவில் நியூயார்க் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக இருக்கிறார்கள். நியூயார்க், நியூ ஆர்லியன்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் இருப்பு இல்லாமல் உள்ளது. ஏற்கெனவே செயற்கை சுவாசக் கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் கூறியுள்ளேன் என்றார்.

    English summary
    America may reach 2 lakhs death for coronavirus, as major cities are running out of medical supplies, says scientist.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X