வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டம்மி கொரோனா வைரஸை உருவாக்கிய அமெரிக்கா.. செம்ம கிராக்கி.. இதனால் என்ன பயன்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிக்காக லேசானா வீரியம் கொண்ட கொரோனா வைரஸை அமெரிக்கா உருவாக்கி உள்ளது. இந்த டம்மி கொரோனா வைரஸ் மனிதர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி கொரோனா வைரஸ் தொற்றால் மூச்சுதிணறல் ஏற்பட்டு பலரும் உயிரிழக்கிறார். ஏற்கனவே சர்க்கரை வியாதி, ஆஸ்துமா, ரத்த அழுத்தம் உள்பட நாள்பட்ட தொற்றா வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் உயிர் பிழைப்பது கடினமாகி விடுகிறது.

எனவே இத்தகைய கொடிய வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 444 பேர் பலி.. வெளியான புது லிஸ்ட்.. பீதி தேவையில்லை- விஜயபாஸ்கர் தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 444 பேர் பலி.. வெளியான புது லிஸ்ட்.. பீதி தேவையில்லை- விஜயபாஸ்கர்

அதிக பாதுகாப்பு வசதி

அதிக பாதுகாப்பு வசதி

மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கும் ஆபத்தை தரக்கூடிய மோசமான வைரஸாக உள்ளது. அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் மருந்து கண்டுபிடிக்கும் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. ஆனால் உலகெங்கும் உள்ள பல விஞ்ஞானிகளுக்கு தேவையான வசதிகளை அணுக முடியாததால், தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை இது மிகவும் பாதித்துள்ளது. இந்த தடையை சமாளிக்க வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகம் புதிய முயற்சி செய்தது.

லேசான வீரியம்

லேசான வீரியம்

இதன்படி, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள லேசான வீரியம் கொண்ட புதிய டம்மி வைரஸ் ஒன்றை உருவாக்கி உள்ளனர். ஆய்வக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் வெசிகுலர் ஸ்டோமேடிடிஸ் வைரஸ் (விஎஸ்வி) உடன், நாவல் கொரோனா வைரசின் மரபணுவை கலந்து கலப்பு வைரசை உருவாக்கி உள்ளார்கள்.

எதற்கு உருவாக்கம்

எதற்கு உருவாக்கம்

இந்த வைரசும், கொரோனாவைப் போலவே மனிதர்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடியது ஆகும. எனவே மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியின் போது பாதிப்பை விளைவிக்காது. இந்த கலப்பு வைரசை வழக்கமான ஆய்வக கட்டமைப்புக்குள் பயன்படுத்தலாம். , மிக அதிக பாதுகாப்பு வசதிகள் தேவையில்லை. எனவே கொரோனா வைரஸ் மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இன்னும் நிறைய ஆய்வகங்கள் ஈடுபட வாய்ப்பிருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Recommended Video

    Chennai- க்கு வருகிறது Covaxin பரிசோதனை
    என்ன பெயர்

    என்ன பெயர்

    வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழக பள்ளியின் மூத்த ஆய்வாளர் சீன் வீலன் இது பற்றி கூறும் போது, ‘‘ என் வாழ்நாளில் பார்த்திராத ஒன்று. இவ்வளவு குறுகிய காலத்தில் இதுபோன்ற ஒரு அறிவியல் உபகரணங்கள் தேவைப்பகின்றன. புதிய கலப்பின வைரசை அர்ஜென்டினா, பிரேசில், மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா முழுவதிலும் ஆய்வகங்களுக்கு விநியோகித்துள்ளோம். இன்னும் பல நாடுகளும் இந்த வைரஸை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளன,'' என்றார். இந்த ஆய்வக தயாரிப்பு வைரசுக்கு ஆய்வாளர்கள் விஎஸ்வி-சார்ஸ்-சிஓவி-2 என பெயர் சூட்டி உள்ளார்கள்.

    English summary
    Researchers develop 'mild-virus' that mimics COVID-19; Here is how it can aid in vaccine discovery
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X