வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டொனால்ட் டிரம்புடன் மோதல்: பதவியை திடீர் ராஜினாமா செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் டிரம்புடன் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷார் ஆசாத் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் காலூன்றி ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இவர்களை கட்டுப்படுத்த அமெரிக்க படைகள் அங்கு சென்றன. ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு நகரங்களை மீட்டது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அதில் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டனர். எனவே அங்கிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுகின்றன என வெளியிட்டார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விளக்கம்

விளக்கம்

இந்த அறிவிப்பால் அமெரிக்க பாதுகாப்பு துறை ஜேம்ஸ் மேட்டிசி கடும் அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து வியாழக்கிழமை அன்று அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து சிரியாவில் உள்ள நிலவரம் குறித்து அமெரிக்க படைகள் அங்கு இருப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.

விடை பெறுகிறார்

எனினும் டிரம்ப் அதை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஜேம்ஸ் பதவி விலகுவதாக டிரம்பிடம் கடிதத்தை அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை டிரம்பும் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில் பிப்ரவரி மாதம் இறுதியில் ஜேம்ஸ் மேட்டிஸ் விடை பெறுகிறார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அடுத்த பாதுகாப்பு துறை அமைச்சர் விரைவில் பதவியேற்பார் என குறிப்பிட்டிருந்தார். இதனிடையே மேட்டிஸ் பதவி விலகலால் ஆளுங்கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

English summary
Mattis’s decision to quit the administration came after Donald Trump confirmed he was ending all US military operations in Syria.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X