வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காஷ்மீரில் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம்.. பாக். பிரச்சாத்தில் அமெரிக்க பெண் எம்பி புகார்

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீரில் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம்.. பாக். பிரச்சாத்தில் அமெரிக்க பெண் எம்பி புகார்-வீடியோ

    வாஷிங்டன்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்பு முடக்கம் மற்றும் உயிர்காக்கும் மருத்து உதவி முடக்கத்தை முடிவு கொண்டு வர வேண்டும் என அமெரிக்காவின் ஜனநாய கட்சியைச் சேர்ந்த எம்பி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் விமர்சித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல் என குற்றம்சாட்டி வரும் பாகிஸ்தானியர்களின் பிரச்சாரத்தை அவர் ரீடுவிட் செய்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரஉத்தரவிட்டது.

    அன்று முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரபு பல இடங்களில் பிறப்பிக்கப்படுள்ளது. தொலைப்பேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

    மனித உரிமை மீறல்

    மனித உரிமை மீறல்

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் 58 நாட்களாக ஊடரங்கு உத்தரவு உள்ளதாகவும், நெருக்கடி நிலை காணப்படுவதாகவும், அங்கு மனித உரிமை மீறல் நடைபெறுவாகவும் பாகிஸ்தானில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    காஷ்மீர் பிரச்சனை

    காஷ்மீர் பிரச்சனை

    இந்த பிரச்சாரங்களுக்கு அமெரிக்காவின் ஜனநாய கட்சியைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பிரச்சாரத்தில் கலந்து கொண்டு அவர்களின் அறிவிப்பு பலகையில் ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து எழுதியுள்ளார்.

    காஷ்மீரிகளின் உரிமை

    காஷ்மீரிகளின் உரிமை

    அதில், அவர் "நாங்கள் காஷ்மீரிகளின் அடிப்படை மனித கவுரவத்திற்காக நிற்கிறோம். காஷ்மீரில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் உட்படஅனைவருக்கும் ஜனநாயகம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் தர வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம் .

    உயர்காக்கும் மருத்துவ சேவை

    ஜம்மு காஷ்மீரில் வன்முறை மற்றும் சித்திரவதை குறித்த அறிக்கைகள் மிகவும் கவலை அளிக்கிறது. தகவல் தொடர்பு முடக்கம் மற்றும் உயிர்காக்கும் மருத்துவ சேவை முடக்கம் ஆகியவற்று ஜம்மு காஷ்மீரில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கூறியுள்ளார்.

    இந்தியர்கள் பதிலடி

    இந்தியர்கள் பதிலடி

    இதற்கு இந்தியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் இணைய சேவைகள் தவிர அனைத்தும் அங்கு இயல்பான நிலையில் தான் இருப்பதாக பதிலடி கொடுத்துள்ளனர். மேலும் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ்க்கு காஷ்மீர் குறித்து என்ன தெரியும் என்றும் அவருக்கு இதுபற்றி வரலாறு தெரியுமா என்றும் சாடியுள்ளனர்.

    English summary
    US Democratic Party Congresswoman Alexandria Ocasio-Cortez supports Pakistan propaganda, she claims medical aid blocked in Kashmir,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X