வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை தடுக்க மாஸ்க் அணிவதை எதிர்த்த டொனால்ட் டிரம்ப் ஆலோசகர் ராஜினாமா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனாவை தடுக்க மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதை கடுமையாக எதிர்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகர் ஸ்காட் அட்லாஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் (ஜோ பைடன்) வெற்றி பெற்றார். இந்த வெற்றியை ஏற்க முடியாது என அடம்பிடித்து வந்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

US: Donald Trumps Coronavirus Advisor Scott Atlas Resigns

இது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் டொனால்ட் டிரம்ப் தரப்பில் போடப்பட்டன. ஆனா எதுவும் டொனால்ட் டிரம்ப்-க்கு சாதகமாக இல்லை. இதனையடுத்து அதிகார மாற்றத்துக்கு டிரம்ப்பும் ஒப்புக் கொண்டார்.

மேலும் ஜோ பிடனும் பல்வேறு குழுக்களை நியமித்து அடுத்த அதிபர் பணிக்கான பணிகளில் தீவிரமாகிவிட்டார். இந்த நிலையில் டிரம்ப்பின் கொரோனா தொடர்பான ஆலோசகரான ஸ்காட் அட்லாஸ் தமது பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி சலோ... 7-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்- நாளையும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைடெல்லி சலோ... 7-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்- நாளையும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

கொரோனாவை தடுக்க முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை கடுமையாக எதிர்த்து சர்ச்சையில் சிக்கியவர் ஸ்காட் அட்லாஸ். கொரோனா விவகாரத்தில் டிரம்ப்புக்கு தவறான ஆலோசனைகள் கொடுத்தவர் என்ற கண்டனங்களுக்கும் உள்ளானவர் ஸ்காட் அட்லாஸ்.

தற்போது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய கொரோனா தடுப்பு குழுவுக்கு வாழ்த்துகளை கூறியுள்ளார் ஸ்காட் அட்லாஸ்.

English summary
Reports said that US President Donald Trump's Coronavirus Advisor Scott Atlas Resigned from the post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X