வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆனானப்பட்ட அமெரிக்காவிலும் தேர்தல் தில்லுமுல்லு.. அதுவும் போலீஸே உடந்தை.. மாஸ்க்கில் காட்டிய வித்தை

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: நம்ம ஊரில் தான் இதுபோன்ற தேர்தல் தில்லுமுல்லுகள் பலவற்றை பார்த்துள்ளோம் என்றால்.. உலகின் பெரிய அண்ணன், அமெரிக்கா நாட்டிலும் தேர்தலின்போது நூதனமான முறையில் மோசடிகள் அரங்கேறுகின்றன.

இதில் காவல்துறையை சேர்ந்த ஒருவரே உடந்தையாக இருந்துள்ளார். அந்த சம்பவம் புகைப்பட ஆதாரத்துடன் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே பல இடங்களில் வாக்கு பதிவுகள் நடந்து வருகின்றன.

ஜோ பிடனுக்கு எதிரான குற்றச்சாட்டு புஸ்வானம்.. அம்பலத்துக்கு வந்தது டிரம்ப்பின் சீனா வங்கி கணக்குகள்!ஜோ பிடனுக்கு எதிரான குற்றச்சாட்டு புஸ்வானம்.. அம்பலத்துக்கு வந்தது டிரம்ப்பின் சீனா வங்கி கணக்குகள்!

இரு வேட்பாளர்கள்

இரு வேட்பாளர்கள்

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. யார் வெற்றி பெறுவார் என்பதை அறிந்துகொள்ள உலகமே ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறது.

போலீஸ் முகக் கவசம்

போலீஸ் முகக் கவசம்

இந்த நிலையில்தான் மியாமி மாகாணத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் டொனால்ட் ட்ரம்ப் உருவப்படம் பொறிக்கப்பட்ட முக கவசத்தை அணிந்துள்ளார். இதை மியாமி ஜனநாயகக் கட்சி பிரமுகர் ஒருவர் பார்த்து அதைப் புகைப்படமாக எடுத்து வெளியிட்டார்.

பிரச்சார விதிமுறை

பிரச்சார விதிமுறை

வாக்காளர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கடைசிநேர பிரச்சாரங்கள் நடைபெறக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், காவல்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு முகக் கவசத்தில் டொனால்ட் ட்ரம்ப் உருவப்படத்தை பயன்படுத்தியிருப்பது தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு ஈடானதாகும் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. எனவே அந்த காவல்துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியினரும், அந்த கட்சியின் ஆதரவாளர்களும், சமூக வலைத்தளங்கள் வாயிலாக கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

மோடி சட்டையில் தாமரை

மோடி சட்டையில் தாமரை

நமது நாட்டில் கூட வாக்குப்பதிவு இயந்திரம் இருக்கக்கூடிய பகுதிக்கு உள்ளே தேர்தல் பிரச்சார சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் போன்றவை இருக்கக் கூடாது என்பது விதிமுறையாகும். கடந்த லோக்சபா தேர்தலின்போது வாக்குப் பதிவு செய்து விட்டு வெளியே வந்த பிரதமர் நரேந்திர மோடி அவரது சட்டைப்பையில் தாமரை சின்னத்தை குத்தி வைத்திருந்தபடி ஊடகங்கள் சந்தித்தார் என்பது குற்றச்சாட்டாகும். இப்போது அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவரே இதுபோல செய்துள்ளார். அவர் அனேகமாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.

English summary
A Miami police officer could face suspension after he was photographed wearing a mask promoting president Donald Trump inside an early voting site while wearing his uniform.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X