வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்.. விடமாட்டார் ட்ரம்ப்.. விசித்திர வழக்குகளை சந்திக்கப் போகிறது நீதிமன்றம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில், இழுபறி நீடித்து வரும் நிலையில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்திக்க போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் 264 வாக்குகளை பெற்றுள்ளார். அதேநேரம், டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.

Us election results decision may move to supreme court

270 என்ற மேஜிக் நம்பர் யாருடையது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 42 மாகாணங்களில், இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

அரிசோனா மற்றும் நெவாடா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்று விட்டாலே போதும் ஜோ பிடன் ஆட்சியை பிடித்து விடலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில்தான், மூன்று மாகாணங்களின் வெற்றிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார் டிரம்ப்.

ஜோ பிடன் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் டொனால்ட் ட்ரம்ப் உறுதியாக இருக்கிறார். தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே டொனால்ட் டிரம்ப் இதைத்தான் கூறியிருந்தார். எனவே அவர் ஒரு முடிவோடு இருப்பது தெளிவாக தெரிகிறது.

ஆபத்தான அதிபர்.. டிரம்ப்பின் ஒவ்வொரு மூவையும் அப்போதே கணித்த பெர்னி.. பிடனுக்கு தந்த வார்னிங்! ஆபத்தான அதிபர்.. டிரம்ப்பின் ஒவ்வொரு மூவையும் அப்போதே கணித்த பெர்னி.. பிடனுக்கு தந்த வார்னிங்!

டிரம்ப்பின் பிரச்சார குழு, மிச்சிகன், பென்சில்வேனியா மற்றும் ஜார்ஜியாவில் வழக்குகள் தொடர்வதாக அறிவித்துள்ளது மற்றும் விஸ்கான்சினில் மறு எண்ணிக்கை செய்யக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஜனநாயக கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெற்றி என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே அமெரிக்க நீதிமன்றம் இதுவரை சந்தித்திராத விசித்திரமான பல வழக்குகளை சந்திக்க தான் போகிறது. இந்த வழக்கின் தன்மை மக்களின் குற்றமா அல்லது தேர்தல் நடைமுறையில் உள்ள குளறுபடிகளின் குற்றமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

English summary
Us supreme court will see different type of petitions against election, Donald Trump will never give up that easily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X